கம்பம்: கம்பம் பகுதியை மிரட்டும் காட்டுயானையைப் பிடிக்க 'ஆபரேஷன் அரிக்கொம்பன்' என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் பாயும் சண்முகா நதி அணையில் முகாமிட்டுள்ள அரிக்கொம்பனைப் பிடிக்க மூன்று கும்கிகள் ஏற்கெனவே வரவழைக்கப்பட்ட நிலையில், முதுமலையைச் சேர்ந்த நான்கு பழங்குடியினர் 191 வனத்துறை அலுவலர்களும் களத்தில் இறங்கி இருப்பதாக வனத்துறை கூறியுள்ளது.
அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி போட்டுப் பிடிக்க ஐவர் கொண்ட மயக்க ஊசி நிபுணர்களும் தயார்நிலையில் உள்ளனர்.
தேனி மாவட்டம், கம்பம் நக ருக்குள் கடந்த 27ஆம் தேதி புகுந்த அரிக்கொம்பன் யானை, மோட்டார் பைக் வாகனத்தில் வந்த பால்ராஜ், 65, என்பவரை தாக்கியது. கம்பம் அரசு மருத் துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று காலை உயிரிழந் தார். அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அரசு சார்பில் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.