ஆணாக வேடமிட்டு மாமியைக் கொன்ற மருமகள்

ஆணாக வேடமிட்டு மாமியைக் கொன்ற மருமகள்

1 mins read
ef166a00-a313-41d1-9bcf-a2794e1a2273
-

நெல்லை: மாமி­யார்-மரு­ம­க­ளுக்கு இடையே நடந்த சண்டை நாளடை­வில் முற்­றிப்­போ­னதை அடுத்து, மாமி­யாரை தீர்த்­துக் கட்ட விரும்­பிய மரு­ம­கள் ஒரு­வர் ஆண் போல் காற்­சட்டை, பனி­யன் அணிந்து, தலைக்கவ­சத்­து­டன் யாரு­மில்­லாத நேரத்­தில் வீட்­டுக்­குள் புகுந்து இரும்­புக் கம்­பி­யால் தாக்கி மாமி­யா­ரைக் கொன்­று­விட்டு வெளி­யேறி உள்­ளார்.

நெல்லை மாவட்­டம், வடுகன்­பட்டி கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் சண்­மு­க­வேல், 63. இவ­ரது மனைவி ராம­லெட்­சுமி, 58. இவர்­க­ளது மகன் ராம­சாமி தனது மனைவி மகா­லெட்­சுமி, 27, இரு குழந்தைகளு­டன் தன் அம்மா வீட்­டின் பக்­கத்­தி­லேயே வசித்து வந்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், தனது வீட்­டில் இருந்த மளிகை சாமான்களைக் காண­வில்லை என ராம­லெட்­சுமி மரு­ம­க­ளி­டம் கேட்டதாக­வும் இத­னால் மகா­லெட்­சுமி கோபத்­தில் இருந்­த­தா­க­வும் தெரிகிறது.

இந்நிலை­யில் செவ்­வாய்க்­கிழமை அதி­காலையில் வீட்­டில் தூங்­கிக் கொண்டிருந்த ராம­லெட்­சு­மியை ஆண் வேடத்­தில் சென்ற மகா­லெட்­சுமி இரும்­பால் அடித்­துக் கொன்­று, அவரது கழுத்­தில் கிடந்த 5 சவ­ரன் தங்கச்சங்­கி­லி­யை­யும் பறித்­துச் சென்­றுள்­ளார்.

நெல்லை அரசு மருத்­து­வ­மனை­யில் அனுமதிக்கப்பட்ட ராமலெட்சுமி நேற்று அதி­கா­லை­யில் உயி­ரி­ழந்­தார். சீத­பற்­ப­நல்­லூர் காவலர்கள் சண்­மு­க­வே­ல் வீட்­டில் இருந்த கண்­கா­ணிப்புக் கேமராவை ஆய்வு செய்தபோது உண்மை வெளியில் வந்தது. மருமகள் மகாலெட்சுமி நெல்லை கொக்­கி­ர­கு­ளம் மக­ளிர் சிறை­யில் அடைக்கப்பட்டார்.