இரு தங்கம்; அரசின் உதவி கோரும் துப்புரவாளர் மகன்

இரு தங்கம்; அரசின் உதவி கோரும் துப்புரவாளர் மகன்

1 mins read
950cd26f-4de7-4533-b0e6-9c8a9062fd9e
-

விழுப்­பு­ரம்: தமி­ழர்­க­ளின் பாரம்­பரிய விளையாட்­டான மல்­லர் கம்­பம் எனும் உடல்வித்தை விளையாட்டுப் போட்டி அண்மை­யில் அசாம் மாநிலத்தில் நடை­பெற்­றது. இந்தப் போட்டியில் இந்­தியா சார்­பில் பங்­கேற்று தங்­கம் வென்று சாதனை படைத்த துப்­பு­ர­வுத் தொழி­லா­ளி­யின் மக­னுக்­குப் பாராட்­டு­கள் குவிந்து வரு­கின்­றன.

விழுப்­பு­ரம் மாவட்­டம், பெரிய காலணி பகு­தி­யைச் சேர்ந்­த­வர் ஹேமச்­சந்­தி­ரன். இவர், தனி­ந­பர் மற்­றும் குழுவாக விளை யாடும் கயிறு மல்­லர் கம்­பம் போட்­டி­களில் இரண்டு தங்­கப் பதக்­கங்களை வென்­றிருந்தார்.

விழுப்­பு­ரம் நக­ராட்­சி­யில் ஹேமச்­சந்­தி­ர­னின் தாயார் துப்­பு­ர­வுப் பணி­யா­ள­ரா­கப் பணி­புரிந்து வரு­கி­றார். அவரது 7,000 ரூபாய் சம்­ப­ளத்­தில் படித்துள்ள ஹேமச்­சந்­தி­ரன், மூன்று வேளை உணவு கூட சரி­யாக கிடை­க்காமல் சிர­மப்­பட்டு வரு­வ­தா­கக் கூறி­யுள்­ளார்.

வறு­மைக்கு இடையே படிப்­பைத் தொடர்ந்து, மல்­லர் கம்­பத்­தில் தங்­கம் வென்றுள்ள தமக்கு தமி­ழக அரசு உத­விக்கரம் நீட்­ட­வேண்­டும் என்று ஹேமச்­சந்­தி­ரன் கோரிக்கை விடுத்­துள்ளார்.

"நான் இப்­போதுதான் பட்­டப்­ப­டிப்பை முடித்­துள்­ளேன். அம்­மா­தான் சிர­மப்­பட்டு துப்­பு­ர­வுப் பணி­யா­ள­ராக வேலை­பார்த்து காப்­பாற்றி வரு­கி­றார். இரண்­டா­வது அனைத்­து­ல­கப் போட்­டி­யில் இந்­தி­யா­வுக்­காக பங்­கேற்று தங்­கப் பதக்­கம் வென்­றுள்­ளேன். எனக்கு அர­சாங்க வேலை கொடுத்­தால் குடும்­பத்­துக்கு உத­வி­யாக இருக்­கும்," என அவர் உதவி கோரியுள்ளார்.

தனது வீட்­டில் பதக்­கம் வைப்­ப­தற்­குக்கூட போதிய இடமின்றி வறுமை நிலையில் வாழ்வதால், அவ­ரது நிலை­யை உணர்ந்து தமிழக அரசு உதவ வேண்­டும் என்று பொதுமக்கள் பலரும் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.