தமிழ் நாடு விவசாயிகள் அதிர்ச்சி; நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
பெங்களூரு: தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் இடையே காவிரி தொடர்பான பனிப்போர் பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என கர்நாடகா மாநிலத் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இந்த அதிர்ச்சியூட்டும் தகவ லால் தமிழ்நாடு விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
கர்நாடக நீர்வள அமைச்சருமான டி.கே.சிவகுமாரின் இந்த நிலைப்பாட்டுக்கு தமிழக நீர்வள அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"பதவி ஏற்றவுடன் புதிய சிந்த னையுடன் வேறு ஏதாவது பணிகள் பக்கம் கவனம் செலுத்துவார் என நினைத்தோம். அண்டை மாநிலங்களுடன் நட்புறவைத் தொடரும் எண்ணம் அவருக்கு இல்லாததுபோல் உள்ளது," என்று கூறியுள்ளார்.
பெங்களூருவில் நீர்வளத் துறை அதிகாரிகளுடன் ஆலோ சித்த சிவகுமார், அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
"கர்நாடகாவில் நீண்டகாலமாக மேகதாது அணை, மகதாயி நதிநீர்த் திட்டம் ஆகியன நிலு வையில் இருந்து வருகின்றன. அவற்றைக் காலதாமதமின்றி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
"கர்நாடகா மாநிலத்தின் நீர்த் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, விரைவில் டெல்லி சென்று சம்பந்தப்பட்ட அமைச்சர்களைச் சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். மேகதாதுவில் அணை கட்டுவது எங்களது உரிமை. வேறு மாநிலங்களுக்குத் துரோகம் செய்யும் எண்ணம் எங் களுக்கில்லை," எனக் கூறினார்.
தமிழக-கர்நாடக எல்லையில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ள கர்நாடகா அதற்கான நிதியை ஒதுக்கி ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது. ஆனால், இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள தமிழ்நாடு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அணை கட்ட இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட சூழலில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், மேகதாது பிரச்சினை மீண்டும் வெடித்துள்ளது. துணை முதல்வர் சிவகுமாரின் பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி. அது எங்களது உரிமை, குறிக்கோள். வேறு மாநிலத்துக்குத் துரோகம் செய்யும் எண்ணம் இல்லை.
கர்நாடக மாநிலத் துணை
முதல்வர் டி.கே.சிவக்குமார்