காலையில் வட்டாட்சியராகப் பதவியேற்பு; மாலையில் பணி ஓய்வு: அதிகாரிக்கு நேர்ந்த சோகம்

கொச்சி: கேரளாவில் வட்டாட்சி யராகப் பதவியேற்ற ஒருவர் அன்று மாலையே பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

காலையில் மகிழ்ச்சி, மாலையில் சோகம் என அவருக்கு அன்றைய பொழுது முடிவுக்கு வந்தது.

கேரள மாநி­லம், கொச்­சியை அடுத்­துள்ள ஆலுவா பகு­தி­யின் வட்­டாட்சி அலு­வ­ல­கத்­தில் துணை வட்­டாட்­சி­ய­ரா­கப் பணி­யாற்றி வந்­தார் ராஷ்­மோன். இவ­ருக்கு கடந்த ஆண்­டி­லேயே கிடைத்­தி­ருக்க வேண்­டிய வட்­டாட்­சி­யர் பதவி நீதி­மன்ற வழக்கு கார­ண­மாக தள்­ளிப்­போ­னது.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தினம் அவர் பதவி ஓய்வு பெற இருந்­தார். அத­னால் வட்­டாட்­சி­யர் ஆகும் விருப்­பம் கைகூ­ட­வில்லை.

இந்­நி­லை­யில், செவ்­வாய்க்­கிழமை இரவு சுமார் 8 மணி­ய­ள­வில் அர­சாங்­கத்­தி­டம் இருந்து ராஷ்­மோ­னுக்கு வந்த கடி­தத்­தில் அவர் அங்­க­மாலி நில­மெ­டுப்பு வட்டாட்சிய­ராக நிய­மிக்­கப்­ப­டு­வதா­க­வும் உடனே பொறுப்­பேற்க வேண்­டும் என்­றும் குறிப்­பி­டப்­பட்டி­ருந்­தது.

இத்­த­க­வல் அவ­ருக்கு மகிழ்ச்சி­யை­யும் சோகத்­தை­யும் ஒரு­சேர அளித்­தது. ஏனெ­னில், புதன்­கிழமை அவர் பணி ஓய்வு பெற இருந்­தார்.

இருப்­பி­னும் பதவி உயர்வை உடனே ஏற்­றுக்­கொள்ள முடிவு செய்த அவர், புதன்கிழமை காலை தனது புதிய அலு­வ­ல­கத்­தில் வட்டாட்சிய­ரா­கப் பொறுப்­பேற்­றார். அன்று மாலையே அவர் பணி ஓய்வு பெறு­வ­தாக அடுத்த கடி­தம் வந்து சேர்ந்­தது.

இதை­ய­றிந்த மற்ற ஊழி­யர்­கள் அதிர்ச்சி அடைந்த போதி­லும், வட்டாட்சியர் ராஷ்­மோ­னுக்கு வாழ்த்து தெரி­வித்­த­னர்.

அவ­ருக்கு புதன்­கிழமை மாலை வழி­ய­னுப்பு விழா­வை­யும் சிறப்­பாக நடத்­தி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!