கருணாநிதி தொடாத துறைகளே இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

1 mins read
0e5cf00b-1dd1-45e6-8317-ddf69847b618
-

சென்னை: தனது தலை­மை­யிலான திரா­விட மாடல் அரசை கரு­ணா­நி­திக்­கும் அவ­ரது புகழுக்­கும் காணிக்­கை­யாக்­கு­வதாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தின் நவீன சிற்பி கரு­ணா­நிதி என்­றும் அவர் தொடாத துறை­களே இல்லை என்­றும் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் புக­ழா­ரம் சூட்­டி­னார்.

காலஞ்­சென்ற முன்­னாள் முதல்­வர் கரு­ணா­நி­தி­யின் நூற்­றாண்டு விழாவை தமி­ழக அர­சும் திமு­க­வும் ஓராண்டு காலம் கொண்­டா­டும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் நூற்­றாண்டு விழா­வுக்­கான இலச்­சி­னையை வெளி­யி­டும் நிகழ்­வில் பங்­கேற்­றுப் பேசிய முதல்­வர் ஸ்டா­லின், காலஞ்­சென்ற கரு­ணா­நிதி வகுத்த பாதை­யில்­தான் தமி­ழக அர­சின் அனைத்து துறை­களும் செயல்­ப­டு­கின்­றன என்­றார்.

"சென்னை, அதைச் சுற்­றி­யுள்ள மாவட்­டங்­களில் அதிக தொழில் நிறு­வ­னங்­கள் உரு­வாக கார­ணம் கரு­ணா­நிதி. திரா­விட மாடல் அரசு இன்று தொழில் புரட்­சியை உரு­வாக்கி வரு­கிறது.

"சிங்­கப்­பூர், ஜப்­பா­னில் உள்­ள­வர்­கள் தமி­ழ­கத்­தின் மீதும் திமுக அரசு மீதும் நல்ல மரி­யா­தையை வைத்­துள்­ள­னர். இந்­தி­யா­வில் முத­லீடு செய்­வ­தாக இருந்­தால் தமி­ழ­கத்­தில்­தான் தொழில் தொடங்­கு­வோம் என அவர்­கள் கூறி­யுள்­ள­னர்.

"ஜப்­பா­னில் கரு­ணா­நிதி பெய­ரைச் சொன்­னாலே அங்­கி­ருக்­கும் தமிழ் மக்­கள் கைதட்­டு­கின்­ற­னர். கரு­ணா­நிதி நூற்­றாண்டு விழா­வுக்­கான குழு விரை­வில் அமைக்­கப்­படும்," என்­றார் முதல்­வர்்்் மு.க.ஸ்டா­லின்.

சென்­னை­யில் கரு­ணா­நிதி பெய­ரில் ஐந்­தா­யி­ரம் பேர் அம­ரும் வகை­யில் உல­கத்­த­ரம் வாய்ந்த பன்­னாட்டு அரங்­கம் அமைக்­கப்­படும் என்­றும் 25 ஏக்­க­ரில் இந்த அரங்­கம் அமை­யும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

இளை­யர்­க­ளின் அறிவு குடி­யி­ருப்­பாக பன்­னாட்டு அரங்­கம் அமை­யும் என்றார் முதல்வர்.