புதுவை: புதுவையில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட தாம்பூலப் பையில் மது புட்டியும் இடம்பெற்றிருந்தது விமர்சனத்துக்கு ஆளானது.
நேற்று முன்தினம் திருமண நிகழ்வு விமரிசையாக நடந்தேறியது. பின்னர் மணமகன் சார்பில் வழங்கிய தாம்பூலப் பையில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்குடன் சிறிய மதுப்புட்டியும் இடம்பெற்றிருந்ததால் மதுப்பழக்கம் உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
எனினும், இது கலாசாரத்தை சீரழிக்கும் செயல் என மற்றொரு தரப்பினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

