தண்டவாளத்தில் சதி வேலை: பெரும் விபத்தில் இருந்து தப்பிய விரைவு ரயில்

தண்டவாளத்தில் சதி வேலை: பெரும் விபத்தில் இருந்து தப்பிய விரைவு ரயில்

2 mins read

திருச்சி: கன்­னி­யா­கு­மரி விரைவு ரயி­லைக் கவிழ்க்க சதி நடந்­தி­ருப்­பது தெரிய வந்­துள்­ளது.

எனி­னும், கடைசி நேரத்­தில் தண்­ட­வா­ளத்­தில் ஏதோ பொருள் இருப்­பதை ரயில் ஓட்­டு­நர் பார்த்­து ­விட்­ட­தால் பெரும் விபத்து தவிர்க்­கப்­பட்­டது.

நேற்று முன்­தி­னம் நள்­ளி­ர­வில் திருச்சி ரயில் நிலை­யத்­துக்கு வந்த கன்­னி­யா­கு­மரி விரைவு ரயில் வழக்­கம்­போல் சுமார் 12.45 மணி­ய­ள­வில் விருத்­தா­ச­லம் நோக்கிப் புறப்­பட்­டது.

ஏறத்­தாழ ஒரு மணி நேரத்­துக்­குப் பிறகு சம­ய­பு­ரம் அருகே அந்த ரயில் சென்று கொண்­டி­ருந்­த­போது தண்­ட­வா­ளத்­தில் சில பொருள்­கள் இருப்­பதை ஓட்­டு­நர் கவ­னித்­துள்­ளார்.

இத­னால் கடும் அதிர்ச்சி அடைந்த அவர், வேக­மா­கச் சென்று கொண்­டி­ருந்த ரயிலை நிறுத்த அவர் பெரி­தும் முயற்சி மேற்­கொண்­டார்.

இத­னால் ரயி­லின் வேகம் குறைந்­த­போ­தி­லும், தண்­ட­வா­ளத்­தின் மேல் இருந்த பொருள்­கள் மீது மோதி­விட்டு சிறிது தூரம் சென்று நின்­றது.

இதை­ய­டுத்து, ஓட்­டு­நர் ரயிலை விட்டு இறங்கி சோதனை மேற்­கொண்­டார். அப்­போது தண்­ட­வா­ளத்­தின் மீது லாரி டயர் போடப்­பட்டு, அதன் மீது மேலும் ஒரு டயர் வைக்­கப்­பட்­டி­ருந்­தது தெரிய வந்­தது.

ரயில் மோதிய வேகத்­தில் அந்த டயர்­களில் ஒன்று ரயில் இன்­ஜின் பகு­தி­யில் சிக்கி இருப்­ப­தைக் கவ­னித்­தார் ஓட்­ட­நர்.

இந்த விபத்து கார­ண­மாக ரயி­லில் மின் இணைப்பு துண்­டிக்­கப்­பட்­ட­து­டன், ரயிலை மேற்­கொண்டு இயக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டது.

ரயி­லைக் கவிழ்ப்­ப­தற்­காகச் சிலர் சதி வேலை­யில் ஈடுபட்டுள்­ள ­தாகக் காவல்­து­றை­யி­னர் சந்­தே­கிக்­கின்­ற­னர். விபத்து நிகழ்ந்த பகு­தி­யில் உள்ள கிரா­மத்­தில் காவல்­துறையினர் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர்.