பயங்கரவாதத் தொடர்பு: கைதான ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு அனுமதி

பயங்கரவாதத் தொடர்பு: கைதான ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு அனுமதி

1 mins read

சென்னை: இளை­யர்­க­ளுக்கு பயங்­க­ர­வாதப் பயிற்சி அளித்த குற்­றச்­சாட்­டின் பேரில், கைது செய்­யப்­பட்­டுள்ள ஐந்து பேரை காவ­லில் எடுத்து விசா­ரிக்க தேசிய புல­னாய்வு முகமை அதி­கா­ரி­கள் முடிவு செய்­துள்­ள­னர்.

ஐஎஸ்­ஐ­எஸ் பயங்­க­ர­வாத அமைப்­புக்கு நாடு முழு­வ­தும் உள்ள சிலர் பல்­வேறு வகை­யில் உதவி செய்­வ­தாகக் கிடைத்த தக­வ­லின் பேரில், தேசிய புலனாய்வு முகமை கடந்த சில மாதங்­க­ளாகத் தேடு­தல் நட­வடிக்கை மேற்­கொண்டு வரு­கிறது.

இது தொடர்­பாக தமி­ழ­கம், கேரளா, கர்­நா­டகா, உத்­த­ரப் பிர­தே­சம், மத்­திய பிர­தே­சம் உள்­ளிட்ட 15 மாநி­லங்­களில் தீவிர விசா­ரணை மேற்­கொண்­ட­போது 'பாப்­பு­லர் ஃப்ரன்ட் ஆஃப் இந்­தியா' என்ற அமைப்­பின் நிர்­வா­கி­க­ளுக்கு பயங்­க­ர­வாத தொடர்­பு­கள் இருப்­பது தெரிய வந்­தது.

இதை­ய­டுத்து, தமி­ழ­கத்­தில் பத்து பேர் உட்­பட நாடு முழு­வ­தும் நூற்­றுக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் கைதா­கி­னர். தமி­ழ­கத்­தில் ஆறு இடங்­களில் அதி­ரடி சோதனை நடத்­தப்­பட்டு பல ஆவ­ணங்­கள், ஆயு­தங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன. அண்­மை­யில் கைதான ஐந்து பேரை காவ­லில் எடுத்து விசா­ரிக்க தேசிய புல­னாய்வு முக­மைக்கு சிறப்பு நீதி­மன்­றம் அனு­மதி அளித்­துள்­ளது.

இதை­ய­டுத்து ஐந்து பேரை­யும் பாது­காப்­பான தனி இடத்­தில் வைத்து, அதி­கா­ரி­கள் தீவிர விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

மேலும், சத்­தி­ய­மங்­க­லம் வனப் பகு­தி­யில் இளை­யர்­க­ளுக்கு ஆயு­தப் பயிற்சி அளித்­த­தா­கக் கூறப்­படும் இடங்­க­ளுக்கு அவர்­களை அழைத்­துச் சென்று, விசா­ரணை நடத்த அதி­கா­ரி­கள் திட்­ட­மிட்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது.