சென்னை விமான நிலையத்தில் புதிய வழிகாட்டும் கருவி

சென்னை விமான நிலையத்தில் புதிய வழிகாட்டும் கருவி

1 mins read

சென்னை: ஓடு­பா­தை­யில் இருந்து விமா­னங்­கள் நடை­மே­டைக்குச் செல்ல வச­தி­யாக சென்னை விமான நிலை­யத்­தில் அதி­ந­வீன தானி­யங்கி வழி­காட்­டும் கருவி அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தப் புதிய ஏற்­பாட்­டின் மூலம், மோச­மான வானிலை கார­ண­மாக விமா­னச் சேவை­யில் ஏற்­ப­டக்­கூ­டிய தாம­தம் தவிர்க்­கப்­படும் என அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

மீனம்­பாக்­கம் விமான நிலை­யத்­தில் விமா­னங்­கள் வந்து, செல்­வ­தற்கு 95 நடை­மே­டை­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

விமா­னங்­கள் ஓடு­பா­தை­யில் இருந்து 'டாக்ஸி வே' எனப்­படும் இணைப்­புச் சாலை­க­ளின் உதவி­யோடு நடை­மே­டைக்கு வந்து நிற்­பது வழக்­கும்.

இந்த நடை­மு­றைக்­காக ஊழி­யர்­கள் தங்­கள் கைகளில் சமிக்ஞை (சிக்­னல்) பல­கை­களை தங்­கள் கையில் ஏந்தி, விமா­னி­களுக்கு வழி­காட்­டு­வர்.

எனி­னும் சூறைக்­காற்று, கன­மழை போன்ற மோச­மான வானிலை நில­வும்­போது, தரை­தள ஊழி­யர்­க­ளின் வழி­காட்டி சைகை­களை விமா­னி­கள் பார்த்து விமா­னங்­களை சரி­யாக கொண்டு வந்து நிறுத்­து­வ­தில் கால­தா­ம­தங்­கள் ஏற்­பட்­டன.

இதை­ய­டுத்து ஐம்­பது அதி­நவீன தானி­யங்கி வழி­காட்­டும் கரு­வி­கள் மீனம்­பாக்­கம் விமான நிலை­யத்­தில் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

இனி விமா­னங்­கள் 'டாக்ஸி வே'யில் இருந்து நடை­மேடை நோக்கி திரும்­பும்­போது சுமார் 60 மீட்­டர் தூரத்­தில் இருந்தே இந்­தப் புதிய கரு­வி­கள் இயங்­கத் தொடங்­கும். அவற்­றின் உத­வி­யோடு செயல்­பட்டு, விமா­னி­கள் சரி­யான திசை­யில் சென்று நடை­மேடைக்கு அருகே விமா­னங்­களைக் கொண்டு வந்து நிறுத்த முடி­யும்.

இத­னால் விமா­னச் சேவை­களில் இனி தாம­தங்­கள் ஏற்­படாது என அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.