தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாமக: சிறுமியின் ஆன்மா அமைதி அடைய மதுக் கடைகளை மூடுங்கள்

1 mins read

சென்னை: தமிழ்­நாட்­டில் உள்ள 90 விழுக்­காடு குடும்­பங்­கள் ஏதோ ஒரு வகை­யில் மது­வால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக பாமக தலை­வர் அன்­பு­மணி தெரி­வித்­துள்­ளார்.

குறிப்­பாக, ஒவ்­வொரு வீட்­டி­லும் உள்ள குழந்­தை­கள் பல்­வேறு வகை­யி­லும் பாதிக்­கப்­ப­டு­வ­தாக அவர் கவலை தெரி­வித்­துள்­ளார்.

வேலூ­ரைச் சேர்ந்த 16 வய­துச் சிறு­மி­யான விஷ்­ணுப்­பி­ரியா, தனது தந்­தை­யின் மதுப்­ப­ழக்­கத்­தால் மன­மு­டைந்து உயிரை மாய்த்­துக்கொண்­டுள்­ளார்.

இது தமி­ழ­கம் முழு­வ­தும் பெரும் தாக்­கத்­தை­யும் விவா­தங்­க­ளை­யும் எழுப்பி உள்­ளது. மதுக்­க­டை­களை மூட வேண்­டும் என பல்­வேறு தரப்­பி­ன­ரும் அர­சுக்கு கோரிக்கை விடுத்து வரு­கின்­ற­னர்.

தமி­ழ­கத்­தில் உள்ள அனைத்து மதுக்­க­டை­க­ளை­யும் மூடு­வ­தன் மூலம் மது­வுக்கு அடி­மை­யா­ன­வர்­க­ளின் குடும்­பங்­களில் தமி­ழக அரசு மகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்த வேண்­டும் என அன்­பு­மணி கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

இத்­த­கைய நட­வ­டிக்­கை­யின் மூலம் உயி­ரி­ழந்த சிறு­மி­யின் ஆன்மா அமைதி அடைய அரசு உதவ வேண்­டும் என­வும் அவர் உருக்­க­மான வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

"சிறுமி விஷ்­ணுப்­பி­ரியா இறப்­ப­தற்கு முன் எழு­தி வைத்­துள்ள கடிதத்­த­தில் குறிப்­பிட்­டுள்ள வரி­கள் என் இத­யத்தை வாட்­டு­கின்­றன. 'என் தந்தை மது அருந்­து­வதை நிறுத்த வேண்­டும் என்­பது­தான் என் ஆசை. எனது குடும்­பம் மகிழ்ச்­சி­யாக இருப்­பதை எப்­போது காண்­பேனோ, அப்­போது­தான் எனது ஆன்மா அமை­தி­ய­டை­யும்,' என்று சிறுமி குறிப்­பிட்­டுள்­ளார்.

"விஷ்ணுப்பிரியாவின் வேண்டுதல் அவருடையது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான பதின்ம வயதுக் குழந்தைகளின் மனநிலை இதுதான்," என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவித்துள்ளார்.