மாநகரின் அடையாளச் சின்னங்களுடன் நடந்த காதணி விழா

மாநகரின் அடையாளச் சின்னங்களுடன் நடந்த காதணி விழா

1 mins read
5aa6586e-c6ab-453d-ace9-cd3deead308c
-

கோவை: சிறு­வ­னுக்கு நடத்­தப்­பட்ட காதணி விழா­வின்­போது கோவை மாந­க­ரின் அடை­யா­ளச் சின்­னங்­களை அவ­ரது குடும்­பத்­தார் சீர்­வ­ரி­சை­யா­கக் கொண்டு வந்­தது பொது­மக்­க­ளின் கவ­னத்தை ஈர்த்­தது.

கோவை மாவட்­டம் சங்­க­னூ­ரைச் சேர்ந்த மகேஷ்வ­ரன், தனது மகன் புக­ழேந்­தி­யின் காதணி விழாவை அண்­மை­யில் சிறப்­பாக நடத்­தி­னார்.

அப்­போது சிறு­வன் புக­ழேந்தி சாரட்டு வண்­டி­யில் ஊர்­வ­ல­மாக அழைத்து வரப்­பட்­டான். மேலும், கோவை­யின் அடை­யா­ளச் சின்­னங்­க­ளா­கக் கரு­தப்­படும் மரு­த­மலை கோவில், கோனி­யம்­மன் கோவில், மணிக்­கூண்டு, ரயில் நிலை­யம் ஆகி­ய­வற்­றின் மாதி­ரி­களை சிறு­வ­னின் குடும்­பத்­தார் சீர்­வ­ரி­சை­யாக கையில் ஏந்தி வந்­த­னர்.

கோவை மாவட்­டத்­தின் அடை­யா­ளச் சின்­னங்­கள் குறித்து பொது­மக்­கள் மத்­தி­யில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தவே இந்த ஊர்­வ­லத்­துக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­த­தாக சிறுவனின் தந்தை மகேஷ்­வ­ரன் செய்தியாளர்களிடம் தெரி­வித்­தார்.