நீலகிரி: உலகப் புகழ்பெற்ற 'ஃபார்முலா 4' கார் பந்தயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பிரியங்கா என்ற 12ஆம் வகுப்பு மாணவி பங்கேற்க உள்ளார். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இப்போட்டியில் பங்கேற்கும் தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமை இவருக்குக் கிடைக்கும்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் வசிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலரான விஜய் என்பவரின் மகளான பிரியங்கா, பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வரும் பிரியங்கா, கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற நான்கு பயிற்சிப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அதன் பலனாக பொதுப்பிரிவில் அவருக்கு எட்டாவது இடம் கிடைத்துள்ளது.
மகளிர் பிரிவில் முதலிடம் பிடித்து சாதித்துள்ள அவர், அடுத்து கோவையில் நடைபெற உள்ள போட்டியிலும் பங்கேற்க உள்ளார்.
அது மட்டுமல்லாமல், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் 'ஃபார்முலா 4' கார் பந்தயத்தில் அகுரா ரேசிங் அணி சார்பில் பங்கேற்கிறார்.

