ஊழல்: தர்மபுரி முன்னாள் மாவட்ட ஆட்சியர் மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

2 mins read
6e8d7a8d-0119-4db0-8159-79fd74dd0d65
-

சென்னை: தர்­ம­புரி மாவட்ட முன்னாள் ஆட்­சி­யர் மலர்­வி­ழி­யின் சென்னை வீட்­டில் தமி­ழக லஞ்ச ஒழிப்பு காவல்­து­றை­யி­னர் நேற்று அதி­ரடிச் சோதனை நட­வடிக்கை மேற்­கொண்­ட­னர்.

இதே­போல் தர்­ம­புரி வட்­டார வளர்ச்சி அலு­வ­ல­ரின் வீட்­டி­லும் சோதனை நடை­பெற்­றது.

கடந்த 2018 பிப்­ர­வரி 28 முதல் 2020 அக்­டோ­பர் 29ஆம் தேதி வரை தர்­ம­புரி மாவட்ட ஆட்­சி­ய­ராக பத­வி­யில் இருந்­தார் மலர்­விழி ஐஏ­எஸ்.

மாவட்ட ஆட்­சி­ய­ராக இருந்­த­போது அரசு அலு­வ­ல­கங்­க­ளுக்கு ரசீது புத்­த­கங்­கள் வாங்க மலர்­விழி உத்­த­ர­விட்­ட­தா­க­வும் அதில் ரூ.1.31 கோடி முறை­கேடு நடந்­துள்­ளது என்­றும் புகார் எழுந்­தது.

அதன் பேரில் ஐஏ­எஸ் அதி­காரி­யான மலர்­விழி உள்­ளிட்ட மூன்று பேர் மீது லஞ்ச ஒழிப்­புத்­துறை நான்கு பிரி­வு­க­ளின்­கீழ் ஊழல் வழக்­குப்­ப­திவு செய்­துள்­ளது.

மேலும், கொரோனா காலக்­கட்­டத்­தில் அரசு அலு­வ­ல­கங்­க­ளுக்­காக கிருமி நாசினி கொள்­மு­தல் செய்­த­தில் முறை­கேடு நடந்­துள்­ள­தா­க­வும் இதி­லும் மலர்­வி­ழிக்கு தொடர்­புள்­ள­தா­க­வும் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

தற்­போது சென்னை அறி­வியல் நக­ரத்­தின் துணைத் தலை­வ­ராக உள்­ளார் மலர்­விழி.

இந்­நி­லை­யில் சென்­னை­யில் விரு­கம்­பாக்­கம் பகு­தி­யில் உள்ள மலர்­வி­ழி­யின் வீட்­டில் காவல்­துறை நேற்று காலை சோதனை மேற்­கொண்­டது.

வட்­டார வளர்ச்சி அலு­வ­லர் வீட்டி­லும் சோதனை

இதற்­கி­டையே, தர்­மபுரி மாவட்­டம் பாப்­பி­ரெட்­டிப்­பட்டி ஒன்­றி­யத்­தில் வட்­டார வளர்ச்சி அலு­வ­ல­ராக பணி­யாற்­றும் கிருஷ்­ணன் என்­ப­வ­­ரது வீட்­டி­லும் லஞ்ச ஒழிப்­புத்­து­றை­யி­னர் சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர்.

கடந்த 2019ம் ஆண்டு கால­கட்­ட­தில் இவர் தர்ம­புரி மாவட்­டம் பென்­னா­க­ரம் ஒன்­றி­யத்­தில் வட்­டார வளர்ச்சி அலு­வ­ல­ராக பணி­யாற்­றி­ய­போது, ஒன்­றிய ஊராட்­சி­களில் சுகா­தாரப் பணி­க­ளின் தேவைக்­காக பிளீச்­சிங் பவு­டர் கொள்­மு­தல் செய்த விவ­கா­ரத்­தில் முறை­கேடு நடந்­த­தாகப் புகார் எழுந்­துள்­ளது.

இதில் மாவட்ட ஆட்­சி­யர் மலர்­வி­ழிக்­கும் தொடர்­புள்­ள­தாகக் கூறப்­பட்­டதை அடுத்து அவர் மீது லஞ்ச ஒழிப்­புத் துறை­யி­னர் வழக்­குப்­ப­திவு செய்­த­னர்.

விசாரணை நடந்து வரும் நிலையில், நேற்று கிருஷ்ணன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.