ஒரே எண்ணில் இரு வாகனங்கள்: பால் திருட்டு அம்பலம்

வேலூர்: வேலூர் மாவட்­டம் சத்து­வாச்­சா­ரி­யில் செயல்­பட்டு வரு­கிறது ஆவின் பால் பண்ணை. பால் பாக்கெட்டுகளை ஏற்றிச் செல்ல இங்கு நேற்று முன்தினம் (ஜூன் 6) வேன்­கள் வந்­தன.

வாகன எண்­களைச் சரிபார்த்த பால்­பண்ணை காவ­லாளி, ஒரே வாகன எண்­ணில் இரண்டு வேன்­கள் உள்ளே சென்­ற­தைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்து, அதி­கா­ரி­க­ளுக்­குத் தக­வல் தெரி­வித்­தார்.

அதி­கா­ரி­கள் விரைந்து வந்து பார்த்­த­போது டிஎன்23 ஏசி 1352 என்ற ஒரே எண்­ணில் இரண்டு வேன்­கள் பல்­லா­யி­ரம் ரூபாய் மதிப்­புள்ள பாக்­கெட் பாலை ஏற்­றிக்­கொண்டு புறப்­ப­டத் தயா­ராக இருந்­தன. உட­ன­டி­யாக அந்த இரண்டு வேன்­க­ளை­யும் தடுத்து நிறுத்திய அதி­கா­ரி­கள், அவற்­றில் ஏற்­றப்­பட்ட பால் பாக்­கெட்­டு­களைப் பறி­மு­தல் செய்­த­னர்.

இந்த பால் திருட்­டுச் சம்­ப­வம் குறித்து ஆவின் பால்­பண்ணை நிர்­வா­கம் காவல்­து­றை­யில் புகார் செய்­துள்­ளது.

வேலூர், திருப்­பத்­தூர், ராணிப்­பேட்டை ஆகிய மூன்று மாவட்ட விவ­சா­யி­க­ளி­ட­மி­ருந்து தினமும் சுமார் 1 லட்­சத்து 10 ஆயி­ரம் லிட்­டர் பால் பெறப்­பட்டு பால் பாக்­கெட்­டு­கள் தயார் செய்­யப்­படு­கின்­றன. அவை சுமார் 600 முக­வர்­க­ளுக்கு 20 ஒப்­பந்த வாக­னங்­கள் மூலம் அனுப்­பப்­பட்டு பொது­மக்­க­ளுக்கு விநி­யோ­கம் செய்­யப்­ப­டு­கிறது. முக­வர்­க­ளுக்கு பால் பாக்­கெட்­டு­களை விநி­யோ­கம் செய்­வ­தற்­கான புதிய ஒப்­பந்­ த­தா­ரர் ஜூன் 1ல் நிய­மிக்­கப்­பட்­டார். அதன் பிறகு இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் நிகழ்ந்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!