சென்னை: மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக மேலாண்மைக்காக ராமநாதபுரத்தைச் சேர்ந்த அதிகாரிக்கு யுனெஸ்கோ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
'மைக்கேல் பட்டீஸ்' என்ற பெயரில் இவ்விருது வழங்கப்படுகிறது.
உயிரினக் காப்பாளருமான ஜகதீஷ் பகான் சுதாகர் (படம்)தமக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
"இந்தியாவிலேயே முதன் முறையாக இவ்விருது எனக்கு கிடைத்துள்ளது. இதை தமிழகத்துக்கு கிடைத்துள்ள பெருமையாகக் கருதுகிறேன்.
"வனப் பாதுகாப்புக் குழுவினர், சுய உதவிக் குழுவினர் மூலம் மரக்கன்றுகள் நடுதல், பனைமரம் நடுதல் உள்ளிட்ட பல பணிகளைச் செய்துள்ளோம்.
"மேலும், கடலோரப் பகுதியில் ஏராளமான மாங்குரோவ் மரக்கன்றுகள் நட்டுள்ளோம். கடல் ஆமைகளைப் பாதுகாக்க அதன் முட்டைகளைச் சேகரித்து பொறிப்பகத்தில் வைத்து பொறித்ததும் குஞ்சுகளை கடலில் விட்டுள்ளோம்," என்று ஜகதீஷ் பகான் சுதாகர் கூறினார்.
கடல் பசுக்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், கடற்பகுதிகளில் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில் தனுஷ்கோடி, ஏர்வாடி பகுதிகளில் சோதனைச்சாவடி அமைத்து மஞ்சள் பை வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.
இதன் மூலம் மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளதாகவும் தமக்கு கிடைத்த விருதை வனத்துறைப் பணியாளர்களுக்குச் சமர்ப்பிப்பதாகவும் ஜகதீஷ் பகான் கூறினார்.
இவ்விருதுடன் இவருக்கு ரூ.9.91 லட்சம் (12 ஆயிரம் அமெரிக்க டாலர்) வழங்கப்பட உள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஜூன் 14ஆம் தேதி விருது விழா நடைபெறும்.
இதற்கிடையே ஜகதீஷ் பகான் சுதாகருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தமிழக வனத் துறைக்கும் தமிழக அரசுக்கும் ஜகதீஷ் பெருமை சேர்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜகதீஷ் பகானுக்கு சமூக ஊடகங்கள் மூலம் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

