ஸ்டான்லி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட அனுமதி

1 mins read

சென்னை: ஸ்டான்லி, தர்­ம­புரி அரசு மருத்­துவக் கல்­லூ­ரி­கள் தொடர்ந்து செயல்­பட அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ள­தாக மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

அண்­மை­யில் திருச்சி, தர்­ம­புரி, ஸ்டான்லி அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­களில் தேசிய மருத்­துவ மன்­றம் மேற்்கொண்ட ஆய்­வின்­போது சில குறை­பா­டு­க­ளைக் கண்­ட­றிந்­தது.

அவற்­றின் அடிப்­ப­டை­யில் அம்­மூன்று கல்­லூ­ரி­க­ளின் அங்கீ­கா­ரம் ரத்­தா­கும் என தகவல் வெளியானது. மேலும், அம்­மூன்று மருத்­து­வக் கல்­லூ­ரி­க­ளி­லும் மாண­வர் சேர்க்கை நடை­பெ­றாது என்றும் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில் சென்னையில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன், எந்த மருத்­துவக் கல்­லூ­ரி­க­ளின் அங்­கீ­கா­ர­மும் ரத்­தா­காது என்­றார்.

"தேசிய மருத்­துவக் கவுன்­சில் சுட்­டிக்­காட்­டிய குறை­பா­டு­கள் களை­யப்­பட்­டுள்­ளன. அது தொடர்­பான அறிக்கை தேசிய மருத்­துவ மன்­றத்­தி­டம் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

"ஸ்டான்லி, தர்­ம­புரி கல்­லூ­ரி­கள் தொடர்ந்து இயங்க தேசிய மருத்­துவ கவுன்­சில் அனு­மதி வழங்கி, அங்­கீ­காரத்தை ஏன் ரத்து செய்யக்­கூ­டாது என்று விளக்­கம் கேட்ட நோட்­டீ­சை­யும் திரும்ப பெற்­றுக் கொண்­டுள்­ளது," என்­றார் அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன்.

திருச்சி மருத்­து­வக் கல்­லூ­ரி­யும் தொடர்ந்து செயல்­பட விரை­வில் அனு­மதி கிடைக்­கும் என்று அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.