ஜனவரி 2024ல் அனைத்துலக புத்தகக் கண்காட்சி

1 mins read

சென்னை: தமி­ழக அரசு சார்­பில் அடுத்த ஆண்டு ஜன­வரி 16 முதல் 18ஆம் தேதி­ வரை சென்­னை­யில் அனைத்­து­லக புத்­த­கக் கண்­காட்சி நடை­பெ­றும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது­கு­றித்து செய்­தி­யா­ளர்­களிடம் பேசிய தமி­ழக பள்­ளிக்­கல்­வித்­துறை அமைச்­சர் அன்­பில் மகேஷ், எழுத்­தா­ளர்­க­ளின் படைப்பு­கள், தமிழ் இலக்­கி­யங்­களை உல­கம் முழு­வ­தும் கொண்டு செல்­ல­வேண்­டும் என்ற எண்­ணத்­தில் சென்னை அனைத்­து­லக புத்­த­கக் கண்­காட்சி நடத்­தப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

"எந்த உலக மொழி­யாக இருந்­தா­லும், அம்­மொ­ழி­யில் உள்ள நல்ல எழுத்­தா­ளர்­க­ளை­யும் அவர்­களின் படைப்­பு­க­ளை­யும் நாம் கொண்­டா­டும் வித­மாக இக்­கண்­காட்­சியை நடத்­து­கி­றோம்.

"பிற மொழி­களில் உள்ள தரமான படைப்­பு­களை தமி­ழில் மொழி­பெ­யர்ப்பு செய்ய ஏறத்­தாழ ரூ.3 கோடியை தமி­ழக அரசு வழங்க இருக்­கிறது," என்­றார் அமைச்­சர் அன்­பில் மகேஷ்.

அடுத்த கண்­காட்­சி­யில் அதிக எண்­ணிக்­கை­யி­லான அரங்­கு­கள் அமைக்­கப்­படும் என்­றும் புத்­த­கக் கண்­காட்­சி­யில் மதிப்­புறு விருந்­தி­ன­ராக மலே­சிய படைப்­பா­ளர்­கள் பங்­கேற்­பர் என்­றும் அவர் கூறி­னார்.

கடந்த ஆண்டு குறு­கிய கால அவ­கா­சத்­தில் கண்­காட்­சிக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. இம்­முறை உரிய அவ­கா­சம் இருப்­ப­தால் கண்­காட்சி சிறப்­பாக நடை­பெ­றும். காலஞ்­சென்ற முதல்­வர் கரு­ணா­நி­தி­யின் நூற்­றாண்டு விழா­வின்­போது புத்­த­கக் கண்­காட்சி சிறப்­பாக நடை­பெற உள்­ளது மகிழ்ச்சி அளிக்­கிறது," என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ்.