காரைக்குடி: இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டது தொடர்பாக காரைக்குடியைச் சேர்ந்த 43 வயதான சாகுல் ஹமீது என்பவரிடம் மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இவர் இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரில் வேலை பார்த்தவர்.
இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சாகுல் ஹமீது இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு நிதியுதவி அளித்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து சிங்கப்பூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டதாகவும் அதன் பின்னர் அங்கு வேலை பார்ப்பதற்கான பணி அனுமதியை ரத்து செய்து, சாகுல் ஹமீதை இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததாகவும் ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
அவர் விமானத்தில் சென்னை வந்திறங்கியபோது, விமான நிலையத்தில் வைத்தே முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் சொந்த ஊருக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வைத்தியலிங்கபுரம் பகுதியில் வசித்து வரும் சாகுல் ஹமீது வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் அமலாக்கத்துறை, வங்கி அதிகாரிகளை உள்ளடக்கிய பத்து பேர் கொண்ட குழு தீவிர விசாரணை மேற்கொண்டதாக ஊடகத் தகவல்கள் தெரி விக்கின்றன.

