நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் தொடங்கின
சென்னை: அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை நடத்து வதற்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் தொடங்கி உள்ளதாக தமிழகத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரி வித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் எத்தனை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் தேவை என்பதை கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருவதாக செய்தியாளர் களிடம் அவர் குறிப்பிட்டார். அடுத்த பத்து மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை தீவிரப்படுத்த இருப்பதாகவும் தேர்தல் அதிகாரி கூறினார்.
வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது: அரசு அறிவிப்பு
சென்னை: வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. வணிக, தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றுக்கு 13 காசு முதல் 21 காசு வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும் என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என்றும் அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
ரயில் விபத்து குறித்து அவதூறு கருத்து: வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு
குமரி: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக அவதூறு கருத்துகளை வெளியிட்ட குமரி வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவானது. செந்தில்குமார் என்ற அந்த வழக்கறிஞரின் சமூக ஊடகப் பதிவுகள் மத உணர்வைத் தூண்டும் வகையில் இருந்ததாகக் காவல்துறை தெரி வித்தது. எனவே அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவானது. இதையடுத்து அவரிடம் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நீலகிரியில் மேட்டுப்பாளையம், குன்னூர் இடையே இயக்கப்படும் மலை ரயில் நேற்று தடம் புரண்டது. எனினும் இவ்விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

