தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனுமதியின்றி பதாகைகள் வைத்தால் சிறைத்தண்டனை

2 mins read
3fa48c58-ed3c-478f-b9de-4df3586bbfb8
-

மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.25,000 அபராதமும் விதிக்கப்படலாம்

சென்னை: இனி உரிய அனு­ம­தி­யின்றி பொது இடங்­களில் விளம்­ப­ரப் பதா­கை­கள் வைத்­தால் மூன்று ஆண்­டு­கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­படும் என தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது.

மேலும், இத்­த­கைய குற்­றங்­களுக்கு ரூ.25 ஆயி­ரம் அப­ரா­தம் விதிக்­கப்­படும் என்­றும் அரசு வெளி­யிட்ட செய்­திக்­கு­றிப்­பில் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் அர­சி­யல் கட்­சி­யி­னர் மட்­டு­மல்­லா­மல் பல்­வேறு தரப்­பி­ன­ரும் பதா­கை­கள் வைப்­பது அதி­க­ரித்து வரு­கிறது.

உரிய அனு­ம­தி­யைப் பெறா­மல், பாது­காப்பு அம்­சங்­க­ளைக் கவ­னத்­தில் கொள்­ளா­மல் நிறு­வப்­படும் ராட்­சத பதா­கை­கள் திடீ­ரென சரி­வ­தால் விபத்து ஏற்­பட்டு அப்­பாவி மக்­கள் பலி­யா­வது தொடர்­க­தை­யாக உள்­ளது.

அண்­மை­யில்­கூட கோவை­யில் ராட்­சத பதாகை கீழே விழுந்து மூன்று பேர் பலி­யா­கி­னர்.

இதற்கு முன்­பும் பலர் இத்­த­கைய விபத்­து­க­ளால் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து விளம்­ப­ரப் பதா­கை­களை வைப்­பது தொடர்­பாக மீண்­டும் கடும் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

"திருத்­தப்­பட்ட நகர்ப்­புற உள்­ளாட்சி அமைப்­பு­கள் சட்­டத்­தின் படி உரி­மம் பெறா­மல் விளம்­பர பலகை வைக்க முடி­யாது. அதே­போல் உரி­மக்­கா­லம் முடிந்­த­தும் பதா­கை­களை உட­ன­டி­யாக அகற்ற வேண்­டும்," என தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

விபத்­திற்கு கார­ண­மான பதா­கை­கள், விளம்­பரப் பலகை வைத்­த­வர்­கள் மீது குற்­ற­வி­யல் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று எச்­ச­ரித்­துள்ள தமி­ழக அரசு, விளம்­ப­ரப் பலகை, பதா­கை­க­ளால் விபத்து, உயி­ரி­ழப்பு நேர்ந்­தால் அதனை வைத்த நிறு­வ­னமோ, தனி­ந­பரோ இழப்­பீடு வழங்க வேண்­டும் என்று அறி­வித்­துள்­ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதன் மூலம் உயிரிழப்பு குறையும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.