பட்டப் பகலில் ஓடஓட விரட்டி இளையர் படுகொலை

பட்டப் பகலில் ஓடஓட விரட்டி இளையர் படுகொலை

1 mins read

திண்­டுக்­கல்: மக்­கள் நட­மாட்­டம் அதி­கம் உள்ள பகு­தி­யில், பட்­டப் பக­லில் இளை­யர் ஒரு­வர் ஓட­ஓட விரட்­டிக் கொல்­லப்­பட்ட சம்­ப­வம் கார­ண­மாக திண்­டுக்­கல் நக­ரில் பதற்­றம் நில­வி­யது.

இரும்புப் பட்­ட­றை­யில் வேலை பார்த்து வந்த அழகு பாண்டி என்­ப­வர் நேற்று முன்­தி­னம் பழனி சாலை­யில் உள்ள பெட்­ரோல் நிலை­யத்­தில் நின்­ற­படி கைப்­பேசி­யில் பேசிக்­கொண்­டி­ருந்­தார்.

அப்­போது அங்கு வந்த இரு ஆட­வர்­கள் அவ­ரு­டன் பேசத் தொடங்­கி­னர். சில நிமி­டங்­களில் இரு தரப்­புக்­கும் இடையே வாக்கு­வா­தம் மூண்­டது. திடீ­ரென அழகு பாண்டி அவர்­க­ளி­டம் இருந்து தப்­பிக்க ஓட்­டம் பிடித்­தார். ஆனால் அந்த இரு ஆட­வர்­களும் அவரை அரி­வாளுடன் விரட்­டிச் சென்­ற­னர்.

பின்­னர் தங்­க­ளி­டம் பிடி­பட்ட அவரை மீண்­டும் பெட்­ரோல் நிலை­யம் அருகே இழுத்­து­வந்து சர­மா­ரி­யாக வெட்­டிச் சாய்த்­த­னர்.

பட்­டப்­ப­க­லில் பொது­மக்­கள் முன்­னி­லை­யில் நடந்த இந்­தச் சம்­ப­வம் குறித்து காவல்­து­றை­யினர் விசா­ரிக்­கின்­ற­னர்.