தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது என முதல்வர் பெருமிதம்

தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது என முதல்வர் பெருமிதம்

2 mins read

சென்னை: யார் ஒப்­புக் கொண்­டா­லும் ஒப்­புக்­கொள்­ளா­விட்­டா­லும், யார் மறைத்­தா­லும் தமிழ்­நாடு இன்று அனைத்­துத் துறை­க­ளி­லும் தலை­சி­றந்த மாநி­ல­மாக, தலை நிமிர்ந்து நிற்­ப­தாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

பல்­வேறு மாவட்­டங்­களில் உள்ள 22 அரசு தொழிற்­ப­யிற்சி நிலை­யங்­களில் புதிய தொழில்­நுட்ப மையங்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றை நேற்று முன்­தி­னம் திறந்து வைத்­துப் பேசிய அவர், தமிழ்­நாட்­டில் உள்ள சிறு, குறு மற்­றும் நடுத்­தர தொழில் நிறு­வ­னங்­கள் தங்­க­ளது தயா­ரிப்­பு­க­ளின் மூல­மாக உல­க­ளா­விய வர்த்­த­கத்­தில் முக்­கிய பங்கு வகிப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

"தமி­ழக அர­சின் 'தமிழ்­நாடு வழி­காட்டி' அலு­வ­ல­கத்­தின் மூல­மாக ஜன­வரி 2022 முதல் மே 2023 வரை 110 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­கி­யுள்­ளன.

"இதன் மூலம் ரூ.203,279 கோடி முத­லீ­டு­கள் பெறப்­பட்டு 196, 596 வேலை­வாய்ப்­பு­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

"இந்த முத­லீ­டு­கள் தமிழ்­நாட்­டின் சமூக பொரு­ளா­தார வளர்ச்­சிக்குப் பெரும் பங்­காற்­றும்," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

'நான் முதல்­வன் திட்­டம்' என்­பது தமது கன­வுத் திட்­டங்­களில் ஒன்று என்று குறிப்­பிட்ட அவர், இத்­திட்­டம் தொடங்­கப்­பட்­ட­தன் வாயி­லாக தொழிற்­சா­லை­க­ளுக்கு தேவை­யான வருங்­கா­லப் பணி­யா­ளர் வளத்தை மேம்­படுத்­தக்­கூ­டிய சூழ்­நிலை உரு­வாகி­யுள்­ளது என்­றார்.

"மாறி­வ­ரும் தொழில்­நுட்­பங்­க­ளுக்கு ஏற்ப எதிர்­கால வேலை­வாய்ப்­பு­களை தமிழ்­நாட்டு இளை­யர்­கள் பெற­வேண்­டும் என்ற உய­ரிய நோக்­கத்­தில், தமிழ்­நாடு அரசு 71 அரசு தொழிற்­ப­யிற்சி நிலை­யங்­களை ரூ.2,877 கோடி செல­வில் திறன் பயிற்­சி­களை வழங்­கும் வகை­யில், தொழில்­நுட்ப மையங்­க­ளாக தரம் உயர்த்த விரைந்து செயல்­பட்டு வரு­கிறது.," என்று முதல்­வர் ஸ்டா­லின் தெரி­வித்­தார்.