முதலிரவு அறையில் இருந்து 12 வயது சிறுமியை மீட்ட அதிகாரிகள்

1 mins read

ராஜ­பா­ளை­யம்: விரு­து­ந­கர் மாவட்­டத்­தில் உள்ள ராஜ­பா­ளை­யம் சேத்­தூர் பகு­தி­யில் 12 வயது சிறு­மிக்குத் திரு­ம­ணம் நடந்­த­தாக புகார் தாக்­க­லா­னதை அடுத்து அதி­கா­ரி­கள் விசா­ர­ணை­யைத் தொடங்­கி­னர்.

சிறு­மி­யின் முக­வரி, அவரை மண­மு­டித்த வாலி­ப­ரின் முக­வ­ரி­யைக் கண்­டு­பி­டித்த அதி­கா­ரி­கள், அந்த இளம் வயது திரு­ம­ணம் ஸ்ரீவில்­லி­புத்­தூர் அருகே உள்ள ஒரு கிரா­மத்­தில் நடந்து இருப்­பதை அறிந்­த­னர்.

அந்­தச் சிறு­மிக்கும் மாரி­முத்து என்ற 22 வயது வாலி­ப­ருக்­கும் உற­வி­னர்­கள் திரு­ம­ணம் செய்து வைத்­தி­ருந்­த­னர்.

அதி­கா­ரி­கள் பிறகு மாப்­பிள்ளை வீட்டைக் கண்­டு­பி­டித்து அங்கு சென்­ற­டைய இரவு 10 மணி­யா­கி­விட்­டது. பல­ரை­யும் அதி­கா­ரி­கள் துரு­வி­த்து­ருவி விசா­ரித்­த­னர்.

மாப்­பிள்­ளை­யும் சிறு­மி­யும் முத­லி­ரவு அறைக்­குச் சென்று இருப்­ப­தாக உற­வி­னர்­கள் தெரி­வித்­ததை அடுத்து அதிர்ச்சி அடைந்த அதி­கா­ரி­கள் இரு­வ­ரை­யும் உடனே வெளியே அழைத்­து­வர உத்­த­ர­விட்­ட­னர்.

மண­மக்­கள் வெளியே வந்­ததை அடுத்து அவர்­க­ளி­டத்­திலும் அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்­தி­னர்.

அந்­தச் சிறு­மி­யின் சொந்த அத்தை மகன்­தான் அந்த வாலி­பர் என்­ப­தும் இரு­வ­ரும் காத­லித்து வந்­ததை அடுத்து இரு­வீட்­டா­ரும் பேசி திரு­ம­ணத்தை நடத்தி வைத்­த­தும் அதிகாரிகளுக்குத் தெரி­ய­வந்­தது.

உற­வி­னர்­களைக் கண்­டித்து சிறு­மியை மீட்ட அதி­கா­ரி­கள், சிறுமியை ஒரு காப்­ப­கத்­தில் சேர்த்­த­னர். புகார் தாக்­க­லா­னதை அடுத்து மாப்­பிள்ளை மாரி­முத்து கைதா­னார்.

மாரிமுத்துவின் பெற்றோர், சிறுமியின் தந்தை ஆகியோர் மீதும் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.