சொந்த விளையாட்டரங்கம் தொடங்குகிறார் நடராஜன்

சொந்த விளையாட்டரங்கம் தொடங்குகிறார் நடராஜன்

1 mins read
34601118-d3c4-4a23-bb45-a7d59a7a10c7
-

சென்னை: இந்­திய கிரிக்­கெட் அணி­யின் வேகப் பந்­து­வீச்­சா­ளர் டி.நட­ரா­ஜன், தம் சொந்த ஊரான சேலம் மாவட்­டம், சின்­னப்­பம்­பட்­டி­யில் தமது சொந்த கிரிக்­கெட் அரங்­கத்­தைத் திறக்­க­வுள்­ள­தாக அறி­வித்­துள்­ளார்.

இம்­மா­தம் 23ஆம் தேதி இடம்­பெ­ற­வுள்ள 'நட­ரா­ஜன் கிரிக்­கெட் அரங்க' திறப்­பு­விழா­வின் தலைமை விருந்­தி­ன­ரா­கக் கலந்­து ­கொள்­கி­றார் இன்­னொரு இந்­திய ஆட்­டக்­கா­ர­ரான தினேஷ் கார்த்­திக்.

நடி­கர் யோகி­பாபு, தமி­ழக கிரிக்­கெட் சங்­கத் தலை­வர் தெய்வ சிகா­மணி, சென்னை சூப்­பர் கிங்ஸ் அணி­யின் தலைமை நிர்­வாக அதி­காரி காசி விஸ்­வ­நா­தன் ஆகியோரும் கிரிக்­கெட் அரங்க திறப்­பு­வி­ழா­வில் பங்­கேற்­கின்­ற­னர்.

இதன்­மூ­லம் தமது கனவு நன­வா­கி­யி­ருப்­ப­தாக டுவிட்­டர் வழி­யாக நட­ரா­ஜன் குறிப்­பிட்­டுள்­ளார்.

சின்­னப்­பம்­பட்­டி­யைச் சேர்ந்த 32 வயது நட­ரா­ஜன் இந்­திய அணிக்­காக இது­வரை ஒரு டெஸ்ட், இரண்டு ஒரு­நாள், நான்கு டி20 போட்­டி­களில் விளை­யா­டி­யுள்­ளார். ஐபி­எல் போட்­டி­களில் சன்­ரை­சர்ஸ் ஹைத­ரா­பாத் அணிக்­காக அவர் விளை­யாடி வரு­கி­றார்.