நள்ளிரவில் சாலை மறியல்

நள்ளிரவில் சாலை மறியல்

1 mins read

சென்னை: மின்­வெட்டு கார­ண­மாக அவ­திக்கு ஆளான பொது­மக்­கள் நள்­ளி­ர­வில் சாலை மறி­ய­லில் ஈடு­பட்­ட­தால் கிழக்கு கடற்­கரை பகு­தி­யில் பர­ப­ரப்பு நில­வி­யது.

உத்­தண்டி, பனை­யூர், அக்­கரை, ஈஞ்­சம்­பாக்­கம் உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­களில் கடந்த சில வாரங்­க­ளாக தொடர் மின்­வெட்டு ஏற்­ப­டு­வ­தாக பொது­மக்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

பல மணி நேரம் மின்­வெட்டு நீடிப்­ப­தா­கக் குமு­றிய அப்­ப­குதி மக்­கள், நேற்று முன்­தி­னம் நள்­ளி­ர­வில் மறி­யல் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். பெண்­கள், குழந்­தை­கள், முதி­ய­வர்­கள் என அனை­வ­ரும் சாலை­யில் குவிந்­ததை அடுத்து, மின்­வெட்­டுக்கு தீர்வு காண்­ப­தாக அரசு அதி­கா­ரி­கள் உறுதி அளித்­த­னர். இதை­ய­டுத்து மறி­யல் கைவி­டப்­பட்­டது.