நாமக்கல்: கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மின்சாரம் பாய்ச்சிக் கொன்ற மனைவியை நாமக்கல் மாவட்ட காவல்துறை கைது செய்தது.
ராசிபுரத்தைச் சேர்ந்த 30 வயதான கீர்த்தனாவுக்கும் இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கதிரேசன் என்பவருடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வரும் அவரது கணவர் இதைக் கண்டித்தார்.
இந்நிலையில் பணி முடிந்து வீடு திரும்பிய கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த கீர்த்தனா, பின்னர் அவரது உடலில் மின்சாரம் பாய்ச்சி கொன்றார்.

