முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல்: ஸ்டாலின் கணிப்பு

முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல்: ஸ்டாலின் கணிப்பு

1 mins read

சேலம்: அடுத்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­ல் விரை­வில் நடை­பெற உள்­ள­தாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் கூறி­யுள்­ளார்.

சேலத்­தில் நடை­பெற்ற திமுக செயல் வீரர்­கள் கூட்­டத்­தில் கலந்­து­கொண்டு பேசிய அவர், எதிர்­வ­ரும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தமி­ழ­கம், புது­வை­யில் உள்ள நாற்­பது தொகு­தி­க­ளி­லும் திமுக வெற்­றி­பெற கட்­சி­யி­னர் உழைக்க வேண்­டும் என்­றார்.

"திமு­க­வில் இரண்டு கோடி உறுப்­பி­னர்­க­ளைச் சேர்த்து இருக்­கி­றோம். தமி­ழ­கம் முழு­வ­தும் வாக்­குச்­சா­வடி பொறுப்­பா­ளர்­களை நிய­மித்­தி­ருக்­கி­றோம். பூத் கமிட்டி அமைக்­கும் பணி­யும் முடித்­தி­ருக்­கி­றோம். இது சாதா­ரண பணி இல்லை. இந்­திய அள­வில் மட்­டு­மல்­லா­மல் உல­கம் முழு­வ­தும் இது­போன்ற கட்­சிப் பணி­யாற்­றும் அர­சி­யல் கட்சி இருக்க முடி­யாது," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

அடுத்த ஆண்­டு­தானே பாரா­ளு­மன்­றத் தேர்­தல் என திமு­க­வி­னர் லேசாக இருந்­து­வி­டக்­கூ­டாது என்று குறிப்­பிட்ட அவர், முன்­கூட்­டியே நடை­பெற வாய்ப்­புள்­ள­தால் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்கு இப்­போதே தயா­ரா­கி­விட வேண்­டும் என்­றார்.்

"இன்று தமிழ்­நாட்­டிற்கு அமித்ஷா வந்­துள்­ளார். இதன் மூலம் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்கு அவர்­கள் தயா­ராகி வரு­வது தெரி­கிறது. மத்­திய அரசு தமிழ்­நாட்டுக்காகச் செயல்படுத்திய திட்­டங்­கள் பற்­றிய பட்­டி­யலை அமித்ஷா வெளி­யி­டு­வாரா?

"பல்­வேறு திட்­டங்­களை தமி­ழ­கத்­திற்கு நாங்­கள் கொண்டு வந்­தோம். தமிழ் மொழியை செம்­மொழி ஆக்­கி­னோம். நெடுஞ்­சாலை துறை மூல­மாக பல திட்­டப் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன," என்று குறிப்­பிட்ட முதல்­வர் ஸ்டா­லின் மேலும் பல திட்­டங்­க­ளைப் பட்­டி­ய­லிட்­டார்.