தீயசக்தி: அச்சத்தால் வெளியேறி திரும்பிய கிராம மக்கள்

2 mins read

கிருஷ்­ணகிரி: தங்­கள் கிரா­மத்­தில் தீய­சக்­தி­க­ளின் ஆதிக்­கம் இருப்­ப­தாக அஞ்சி, அங்கு வசித்த ஒட்­டு­மொத்த மக்­களும் வனப்­ப­கு­தி­யில் தற்­கா­லி­க­மாகக் குடி­யே­றி­னர்.

சிறப்­புப் பூசை­க­ளுக்­குப் பின்­னர் அத்­தீய சக்­தி­கள் விரட்­டி­ அ­டிக்­கப்­பட்­ட­தா­கக் கூறி அம்­மக்கள் மீண்­டும் தங்­கள் வீடு­களுக்­குத் திரும்பி உள்­ள­னர்.

கிருஷ்­ண­கிரி மாவட்­டம் கூளியம் ஊராட்­சி­யில் அமைந்­துள்­ளது ஒம்­ப­ல­கட்டு கிரா­மம்.

அங்கு அண்­மைக்­கா­லத்­தில் பல்­வேறு மர­ணச் சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தன. எதிர்­பா­ராத சம்­ப­வங்­க­ளால் கிராம மக்­கள் கடும் அதிர்ச்சி அடைந்­த­னர்.

சில தீய சக்­தி­கள் ஊருக்­குள் புகுந்­து­விட்­ட­தாகப் பெரி­ய­வர்­கள் கூறி­ய­தை­ய­டுத்து, அச்­சக்­தி­களை விரட்­டி­ய­டிப்­பது என முடி­வா­யிற்று.

இதை­ய­டுத்து ஒட்­டு­மொத்­த­மாக ஊரைக் காலி செய்துவிட்டு அரு­கி­லுள்ள வனப்­ப­கு­தி­யில் குடி­யேறி பாது­காப்­பாகத் தங்கி இருப்­பது என்­றும் அங்­கி­ருந்­த­ப­டியே தீய சக்­தி­களை விரட்­டி­ய­டிப்­பது என்­றும் திட்­ட­மி­டப்­பட்­டது.

நேற்று முன்­தி­னம் குழந்­தை­கள் முதல் முதி­யோர் வரை என ஊர் மக்­கள் அனை­வ­ரும் அங்கிருந்து வெளி­யே­றி­னர்.

ஆடு, மாடு, கோழி­கள், நாய்கள் என தாங்கள் வளர்த்த கால்­ந­டை­க­ளை­யும் உடன் அழைத்துச் சென்­ற­னர். இளை­யர்­கள் சிலர் மட்­டும் பாது­காப்­புக்­காக ஊர் எல்­லை­யில் நிறுத்தி வைக்­கப்­பட்­ட­னர்.

ஒம்­ப­ல­கட்டு கிரா­மம் தென்­பெண்ணை ஆற்­றங்­க­ரை­யோ­ரம் உள்ள வனப்­ப­கு­தி­யில் அமைந்­துள்­ளது. கிராம மக்­கள் ஒரு­நாள் முழு­வ­தும் அங்­கேயே தங்கி வன தேவ­தை­களை வழி­பட்டு சமைத்துச் சாப்­பிட்­ட­னர்.

அதை­ய­டுத்து இரவு சிறப்­புப் பூசை நடை­பெற்­றது. அதன் பின்னர் சாமி சிலை­களைக் கையில் ஏந்­தி­ய­படி பெண்­கள் முன்னே செல்ல, ஊர் எல்­லையை அடைந்­த­தும் ஆடு­களைப் பலியிட்டு வழி­பட்­ட­னர்.

அதன் பிறகு தங்­க­ளு­டைய வீடு­க­ளின் முன் கற்­பூ­ரம் ஏற்றி வழி­பட்டு, வீடு­க­ளுக்­குச் சென்­ற­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.