அதிகாலையில் வணிக வளாகத்தில் தீ விபத்து: 11 கடைகள் தீக்கிரை; சென்னையில் பரபரப்பு

1 mins read

சென்னை: வணிக வளா­கத்­தில் ஏற்­பட்ட பயங்­கர தீ விபத்து கார­ண­மாக சென்­னை­யில் பர­ப­ரப்பு நில­வி­யது.

சென்னை, சவு­கார்­பேட்­டை­யில் உள்ள மிண்ட் சாலை­யில் ஏரா­ள­மான துணிக்­க­டை­கள் உள்­ளன.

நேற்று அதி­காலை வேளை­யில் இப்­ப­கு­தி­யில் உள்ள வணிக வளா­கம் ஒன்­றில் திடீ­ரென தீப்­பற்­றி­யது. சுமார் மூன்று மணி­ய­ள­வில் அந்த வளா­கத்­தில் உள்ள ஒரு கடை­யில் தீ மூண்­டது.

இதை­ய­டுத்து, அடுத்த சில நிமி­டங்­களில் அரு­கி­லுள்ள கடை­க­ளுக்­கும் தீ பர­வி­யது.

அவற்­றுள் பெரும்­பா­லானவை துணிக்­க­டை­கள் என்­றும் இரண்டு நகைக்கடை­களும் தீ விபத்­தில் பாதிக்­கப்­பட்­டன என்றும் காவல்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­தன.

இது­கு­றித்து தக­வல் அறிந்த தீய­ணைப்­புத் துறை­யி­னர் விரைந்து வந்து தீயை அணைக்க துரித நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­னர்.

மொத்­தம் ஆறு தீய­ணைப்பு வாக­னங்­களில் வந்த ஐம்­துக்­கும் மேற்­பட்ட வீரர்­கள் ஏறத்­தாழ இரண்டு மணி நேரம் போராடிய பிறகே தீயைக் கட்­டுக்­குள் கொண்டு வர முடிந்­தது.

மின்­க­சிவு கார­ண­மாக இந்த விபத்து ஏற்­பட்­டி­ருக்­க­லாம் என முதற்­கட்ட தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

காவல்­துறை வழக்­குப் பதிவு செய்து விசா­ரணை நடத்தி வரும் நிலை­யில், 11 கடை­கள் இந்த விபத்­தில் தீக்­கி­ரை­யா­ன­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இத­னால் லட்­சக்­க­ணக்­கில் நஷ்­டம் ஏற்­பட்­டுள்­ள­தாக வியா­பாரி­கள் கண்­ணீர்­மல்­கத் தெரி­வித்­த­னர். தீ விபத்­தின் பின்­னணி­யில் ஏதே­னும் சதி உள்­ளதா என்­றும் காவல்­துறை விசா­ரிக்­கும் எனக்­கூ­றப்­ப­டு­கிறது.

இந்­தத் தீ விபத்­தில் உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­பட்­ட­தாக தக­வல் ஏது­மில்லை.