நீட் தேர்வு: தமிழகம் சாதனை; தமிழக மாணவர் இமாலய சாதனை

சென்னை: இள­நிலை மருத்­து­வப் படிப்­புக்­கான நீட் தகு­தித் தேர்வு சென்ற மாதம் நடந்­தது. அதில் தமி­ழ­கத்­தைச் சேர்ந்த பிர­பஞ்­சன் என்ற மாண­வர் நூற்­றுக்கு நூறு (99.9999019%) பெற்று இந்­தி­யா­வி­லேயே முத­லி­டத்­தில் தேர்ச்சி பெற்று இருக்­கி­றார்.

ஆந்­தி­ரா­வைச் சேர்ந்த பேரா வருண் சக்­க­ர­வர்த்தி என்ற மாண­வ­ரும் இதே சாத­னையை நிகழ்த்தி இருக்­கி­றார்.

மொத்­த­மா­கப் பார்க்­கை­யில் இந்த நீட் தேர்­வில் தமி­ழக மாண­வர்­க­ளின் சாதனை இதர அனைத்து மாநி­லங்­க­ளை­யும் விட விஞ்சி நிற்­கிறது.

தேசிய அள­வில் முதல் 10 இடங்­க­ளைப் பிடித்த மாண­வர்­களில் நான்கு பேர் தமி­ழ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாக இருக்­கிறது.

நீட் தேர்­வைச் சென்ற மாதம் தமிழ்­நாட்­டைச் சேர்ந்த 1.44 லட்ச மாணவ, மாண­வி­கள் எழு­தி­னர். அவர்­களில் ஏறக்­கு­றைய 60 விழுக்­காட்­டி­னர் அதா­வது 78,693 பேர் தேர்ச்­சி­ய­டைந்­து­விட்­ட­னர்.

நீட் தேர்வை தேசிய தேர்­வு­கள் முகவை என்ற அமைப்பு ஆண்­டு­தோ­றும் நடத்தி வரு­கிறது. அதன்­படி, 2023-24ஆம் கல்­வி­யாண்டு மாண­வர் சேர்க்­கைக்­கான தேர்வு 490 நகர்­களில் 3,000க்கும் மேற்­பட்ட மையங்­களில் நடந்­தது. தமி­ழ­கத்­தில் மட்­டும் 24 மாவட்­டங்­களில் 200 தேர்வு மையங்­களில் மாணவ, மாண­வி­கள் தேர்வு எழு­தி­னர்.

தமி­ழ­கம் விழுப்­பு­ரம் மாவட்­டம் மேல­ஓ­லக்­கூர் கிரா­மத்­தைச் சேர்ந்த பிர­பஞ்­சன் 720 மதிப்­பெண்­க­ளைப் பெற்றுள்ளார். இது ஏறக்­கு­றைய 100%க்­குச் சமம்.

கவுஸ்­தவ் பவுரி (716), சூர்யா சித்­தார்த் (715), வருண் (715) ஆகிய இதர மூன்று தமி­ழக மாண­வர்­களும் இந்­திய அள­வில் முறையே 3, 6, 9வது இடங்­களைப் பிடித்து இருக்­கி­றார்­கள்.

உத்­த­ரப் பிர­தேச மாண­வர்­கள் அதி­க­ள­வில் தேர்ச்சி அடைந்து இருக்­கி­றார்­கள். மகா­ராஷ்­டிரா, ராஜஸ்­தான் மாநி­லங்­கள் இதில் அடுத்­த­டுத்த இடங்­க­ளைப் பெற்றுள்­ளன.

நீட் தேர்­வில் தேர்ச்­சி­ய­டைந்­த­வர்­கள் இந்­தியா முழு­வ­தும் செயல்­படும் அரசு, தனி­யார் மருத்­து­வக் கல்­லூ­ரி­களில் எம்பிபி­எஸ், பிடி­எஸ், சித்தா, ஆயுர்­வேதா, யுனானி, ஓமி­யோ­பதி படிப்­பு­கள், கால்­நடை மருத்­துவ படிப்­பில் சேர்ந்து படித்து இள­நிலைப் பட்­டம் பெற­லாம்.

மொத்­த­மா­கப் பார்க்­கை­யில் சென்ற ஆண்­டை­விட இந்த ஆண்­டில் தமி­ழக மாண­வர்­கள் அதி­க­மாக சாதித்து இருப்­ப­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னி­டையே, தனி­யார் தொலைக்­காட்சி ஒன்­றுக்குப் பேட்­டி­ய­ளித்த பிர­பஞ்­சன், நீட் தேர்­வில் சாதனை அள­வுக்கு வெற்றி பெற வேண்­டு­மா­னால் கடின உழைப்­பும் கடும் பயிற்­சி­யும் அவ­சி­யம் என்­றார்.

தேர்வு நெருங்க நெருங்க நீட் தேர்வை ஒத்த ஜிடி எனப்­படும் தேர்­வு­களைப் பல முறை எழுதி எழுதிப் பார்க்க வேண்­டும் என்று கூறிய திரு பிர­பஞ்­சன், எய்ம்ஸ் அல்­லது ஜிப்மர் மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் சேர்ந்து படிப்­பேன் என்று தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!