முடிந்தால் பிடி; சவால்விட்ட கஞ்சா குண்டர்கள் சிக்கினர்

முடிந்தால் பிடி; சவால்விட்ட கஞ்சா குண்டர்கள் சிக்கினர்

2 mins read
6df3f59f-4a32-4971-825f-5cb0526f1502
-

ஆந்திரா, ஒடிசாவில் பதுங்கி இருந்து தொலைத்தொடர்புக்குப் புதிய வழி கண்டனர்

மதுரை: முடிந்­தால் பிடித்­துப்­பார் என்று மதுரை நகர காவல்­துறை அதி­கா­ரி­க­ளுக்­குச் சவால்­வி­டுத்த கஞ்சா வியா­பா­ரி­கள் இப்­போது கம்பி எண்­ணு­கி­றார்­கள்.

மதுரை, தூத்­துக்­குடி மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த அந்­தச் சந்தே­க­ ந­பர்­கள் ஆந்­திரா, ஒடிசா போன்ற மாநி­லங்­களில் தங்கி செயல்­பட்டு வந்­த­னர்.

சில வாரங்­க­ளுக்கு முன் அந்த நபர்­கள் தமி­ழக காவல்­துறைக்கு ஒரு சவால் விடுத்­த­னர்.

"காவல்­து­றை­யி­ன­ரின் ஜம்­பம் எங்­க­ளி­டம் பலிக்­காது. முடிந்­தால் எங்­க­ளைப் பிடித்­துப் பாருங்­கள்," என்று அந்­தப் போதைப்­பொ­ருள் கடத்­தி­கள் விடுத்த சவாலை காவல்­துறை ஏற்­றது.

மதுரை நகர காவல் நிலை­யம் அந்­தக் குற்­ற­வா­ளி­க­ளைப் பிடிக்க வியூ­கம் ஒன்­றைத் தீட்­டி­யது.

முதன்­மு­த­லாக மே மாதம் 10ஆம் தேதி ஒரு கும்­பல் சிக்­கி­யது. அந்­தக் கும்­ப­லி­டம் 2,000 கிலோ கஞ்சா பிடி­பட்­டது. புலன்­வி­சா­ர­ணையை அடுத்து ஜேகே எனப்­படும் பி ஜெய­கு­மார், 35, என்­ப­வரை அதி­கா­ரி­கள் தேடத் தொடங்­கி­னர்.

ஜெய­கு­மார், ஏழு கஞ்சா வழக்கு­கள் உட்பட 26 வழக்கு­களை­யொட்டி தேடப்­பட்டார்.

இந்த நிலை­யில், ராதா­கிருஷ்ணன் என்­கின்ற எம் ராதா, 32, வாழைப்­பழ சிவ­கு­மார் என்ற ஜி சிவ­கு­மார், 38, ஜோஸ் என்­கின்ற மெர்­வின் ஜோஸ், 24 ஆகி­யோ­ரு­டன் சேர்ந்துகொண்டு ஜேகே காவல்­து­றைக்குச் சவால் விடுத்து இருந்­தார்.

பல கோணங்களில் புலன்­விசாரணை நடத்தி வந்த மதுரை நகர காவல்­து­றை­யைச் சேர்ந்த சிறப்­புக்­குழு, ஒடிசா சென்று முத­லில் ஜேகேவை கைது செய்­தது.

தொடர்ந்து ஆந்­தி­ரா­வில் இதர மூவ­ரும் பிடி­பட்­ட­னர் என்று மதுரை காவல்­நி­லைய அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

இந்த விவ­கா­ரத்­தில் மேலும் சில சந்­தே­கப்­ பேர்­வ­ழி­க­ளுக்­குப் பங்கு இருக்­கிறது. அவர்­க­ளை­யும் விரை­வில் பிடித்­து­வி­டு­வோம் என்று அந்த அதி­காரி மேலும் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, பல மாநி­லங்­களில் இருந்­தும் கஞ்­சாவை அடி­மாட்டு விலைக்கு வாங்கி தமிழ்­நாட்­டில் பெரும் விலைக்கு விற்­று­வந்த அந்­தக் கும்­பல், கைப்­பே­சி­க­ளைப் பயன்­ப­டுத்­தி­னால் சிக்­கிக்­கொள்­வோம் என்­ப­தற்­காக மோடம் (modem) அடிப்­ப­டை­யிலான இணை­யத் தொடர்­பைப் பயன்­ப­டுத்தி வந்­தது.

அனைத்­து­லக பண பரி­வர்த்­த­னை­க­ளி­லும் அந்­தக் கும்­பல் ஈடு­பட்டு இருக்­கிறது. இதன்­தொ­டர்­பில் வரு­மான வரித்­து­றைக்­குத் தாங்­கள் கடி­தம் எழு­தப்­போ­வ­தாக மதுரை நகர காவல்­துறை மேலும் தெரி­வித்­தது.