சென்னை: சென்னையில் பல்வேறு போக்குவரத்து விதிமீறலுக்காக நாள்தோறும் சராசரியாக 6,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின்றன.
இருப்பினும் சிலர் அபராதத் தொகையைக் குறித்த நேரத்தில் கட்டுவதில்லை.
அத்தகைய குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறை அதிகாரிகள் 156 இடங்களில் திடீரென சோதனை நடத்தினார்கள்.
அந்தச் சோதனைகளில் மட்டும் 8,613 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு சுமார் ரூ.39 லட்சம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது.
கடந்த ஐந்து மாதங்களில் நிலுவையில் இருந்து வந்த 190,246 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு சுமார் 8 கோடி ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்தது.

