இந்தியாவில் 7000 கி.மீ. பைக்கில் சுற்றும் பாகிஸ்தான் வாலிபர்

1 mins read
529f7314-fdbc-4839-91b6-64d41d2eb433
-

புதுடெல்லி: பாகிஸ்­தா­னைச் சேர்ந்த வோல்­கர் அப்­ரா­கா­சன் என்ற இந்த இளை­ஞர், இந்­தி­யா­வில் மோட்­டார்­சைக்­கி­ளில் 30 நாள்­களில் சுமார் 7,000 கிலோ­மீட்டர் தூரம் சுற்­றுப்­ப­ய­ணம் செய்து இருக்­கி­றார்.

கடந்த ஏப்­ரல் 3ஆம் தேதி இந்­தி­யப் பய­ணத்­தைத் தொடங்­கிய இந்த இளை­ஞர், இந்­தி­யா­வின் பல நகர்­க­ளி­லும் தான் பெறும் அனு­ப­வங்­களைக் காணொளி எடுத்து சமூக வலைத்­த­ளங்­களில் பதிவிட்டு வருகிறார்.

பல ஆண்­டு­க­ளா­கப் போராடி தான் விசா பெற்று இருப்­ப­தா­க­வும் இந்­தியா முழு­வ­தும் மக்­கள் அன்­போடு தன்னை வர­வேற்று உண­வ­ளிப்­ப­தா­க­வும் இவர் குறிப்­பிட்டு இருக்­கி­றார்.