புதுடெல்லி: பாகிஸ்தானைச் சேர்ந்த வோல்கர் அப்ராகாசன் என்ற இந்த இளைஞர், இந்தியாவில் மோட்டார்சைக்கிளில் 30 நாள்களில் சுமார் 7,000 கிலோமீட்டர் தூரம் சுற்றுப்பயணம் செய்து இருக்கிறார்.
கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி இந்தியப் பயணத்தைத் தொடங்கிய இந்த இளைஞர், இந்தியாவின் பல நகர்களிலும் தான் பெறும் அனுபவங்களைக் காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
பல ஆண்டுகளாகப் போராடி தான் விசா பெற்று இருப்பதாகவும் இந்தியா முழுவதும் மக்கள் அன்போடு தன்னை வரவேற்று உணவளிப்பதாகவும் இவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

