கன்னியாகுமரி: கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் என்பதால் அந்த மாதங்களில் விசைப்படகுகளில் ஆழ்கடலில் மீன்பிடிக்கக் கூடாது என்று தடை விதிக்கப்படுகிறது.
அதனையொட்டி இந்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டு இருந்தது. தடை நேற்று முடிவடைந்தது.
இதனையடுத்து மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்க தயாராகிவிட்டதாகவும் அவர்கள் இன்றுமுதல் கடலுக்குச் செல்கிறார்கள் என்றும் நேற்று தகவல்கள் தெரிவித்தன.

