அடுத்த திமுக ஊழல் பட்டியல் தயாராகிறது: அண்ணாமலை

அடுத்த திமுக ஊழல் பட்டியல் தயாராகிறது: அண்ணாமலை

1 mins read
0a51e97c-2e4d-4681-a683-447cbd590125
-

அரி­ய­லூர்: அரி­ய­லூர் மாவட்­டம் ஜெயங்­கொண்­டத்­தில் பாஜக அர­சின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்­கூட்­டம் புதன் இரவு நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு பாஜக மாநி­லத் தலை­வர் அண்­ணா­மலை பேசி­னார்.

அப்­போது அவர் கூறு­கை­யில், "கடந்த 9 ஆண்டு­க­ளாக மத்­தி­யில் ஆட்சிசெய்­யும் பாஜக அரசை உலக நாடு­களே பாராட்­டு­கின்­றன. 2014 ஆம் ஆண்டு பொரு­ளிய லில் 11வது இடத்­தில் இருந்த இந்­தியா, தற்­போது 5வது இடத்­தில் உள்­ளது. இதற்கு பிர­த­மர் மோடி­தான் கார­ணம்.

"வரும் மக்­க­ள­வைத் தேர்­த­லில் பாஜக 400 தொகு­தி­களில் வெற்றி பெற்று மோடி மீண்­டும் பிர­த­மர் ஆவார்.

"2014ல் போக்­கு­வ­ரத்து துறை­யில் பணி நிய­மன முறை­கேடு வழக்­கில் செந்­தில் பாலா­ஜியை அம­லாக்­கத் துறை கைது செய்­துள்­ளது.

"அவ­ரைத் தொடர்ந்து அடுத்த இடத்­தில் போக்கு­ வ­ரத்­துத் துறை அமைச்­சர் எஸ்.எஸ்.சிவ­சங்­கர் உள்­ளார். அடுத்த ஊழல் பட்­டி­யல் விரை­வில் வெளி­யிடப்­படும்," என்­றார்.