நீட் தேர்வில் தோல்வி: 65,800 மாணவருக்கு மனநல ஆலோசனை

1 mins read

சென்னை: தமிழ்­நாடு மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் நேற்று சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­களுக்­கு­ப் பேட்­டி­ய­ளித்­தார். அப்­போது அவர் கூறு­கை­யில், "தமிழ்­நாட்­டில் 1,44,516 மாண­வர்­கள் நீட் தேர்வு எழு­தி­ய­தில் 78,693 பேர் தேர்ச்சி பெற்­றுள்­ள­னர். நீட் தேர்வு முடி­வு­கள் வெளி­யா­கி­யுள்ள நிலை­யில் தேர்­வில் தேர்ச்சி பெறாத 65,823 மாணவ, மாண­வி­களுக்கு மன­நல ஆலோ­சனை வழங்­கப்­பட்டு வரு­கிறது.

"நீட் தேர்­வில் இருந்து விலக்கு கோரு­வ­தில் மத்­திய கல்­வித்­துறை சில விளக்­கங்­களைக் கோரி­யுள்­ளது.

"அது தொடர்­பாக மத்­திய அர­சுக்கு இன்­னும் இரண்டு, மூன்று நாள்­களில் விளக்­கம் அளிக்­கப்­படும். நீட் தேர்­வில் இருந்து விலக்கு பெறு­வ­தில் தமிழ்­நாடு அரசு உறு­தி­யாக உள்­ளது," என்­றார்.