தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரேஷன் அரிசி கடத்தல்: 560 பேர் கைது, 150 வாகனங்கள் பறிமுதல்

1 mins read

சென்னை: தமிழ்­நாடு உணவு பாது­காப்­புத் துறை அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. அதில், "கடந்த ஒரு மாதத்­தில் ரேஷன் அரி­சியை கள்­ளச்­சந்­தை­யில் விற்­ப­தற்­காக 18 லட்­சத்து 49,990 ரூபாய் மதிப்­புள்ள 2,447 குவிண்­டால் ரேஷன் அரி­சி­யைக் கடத்த முயன்ற செயல் முறி­யடிக்­கப்­பட்­டது.

"அரி­சி­யு­டன் 269 எரி­வாயு உரு­ளை­கள், 180 கிலோ கோதுமை, 1,100 கிலோ துவ­ரம்­ ப­ருப்பு, மண்­ணெண்­ணெய் 450 லிட்­டர் ஆகி­யன பறிமு­தல்­ செய்­யப்­பட்­டுள்­ளன.

கடத்­த­லில் ஈடு­பட்ட 561 நபர்­கள் கைது­செய்­யப்­பட்­டி­ருக்­கின்­ற­னர். கடத்­த­லுக்குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட 150 வாக­னங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளது.

"விநி­யோ­கம் செய்­யப்­படும் அத்­தி­யா­வ­சி­யப் பண்­டங்­களை சிலர் முறை­கே­டாக கள்­ளச்­சந்­தை­யில் விற்று அதிக லாபம் ஈட்­டும் நோக்­கத்­து­டன் செயல்­பட்டு வரு­கின்­ற­னர்.

உண­வுப் பொருள் வழங்­கல் மற்­றும் நுகர்­வோர் பாது­காப்­புத் துறை அலு­வ­லர்­கள் மற்­றும் குடி­மைப் பொருள் குற்­றப் புல­னாய்­வுத் துறை அதி­கா­ரி­கள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வரு கிறார்கள்.

"பதுக்­க­லில் ஈடு­ப­டு­வோர்­மீது, வழக்­குப் பதிவு செய்து உரிய மேல் நட­வடிக்கை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்," என தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.