இலாகா இல்லாத அமைச்சராக மாறும் செந்தில் பாலாஜி

இலாகா இல்லாத அமைச்சராக மாறும் செந்தில் பாலாஜி

2 mins read

சென்னை: தமி­ழக மின்­சா­ரத் துறை அமைச்சா் வி.செந்­தில்­பாலா­ஜியை சட்­ட­வி­ரோத பண­மோ­சடி வழக்­கில் அம­லாக்­கத் துறை அதி­கா­ரி­கள் புதன்­கி­ழமை அதி­காலை கைது செய்­தனா்.

அவ­ருக்கு நெஞ்­சு­வலி ஏற்­பட்­ட­தால், சென்னை ஓமந்­தூராா் அரசு பல்­நோக்கு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்டாா். மருத்­து­வ­மனை வளா­கத்­தில் 100க்கும் மேற்­பட்ட துணை ராணு­வப் படை­யி­னர் குவிக்­கப்­பட்டு பாது­காப்பு அளிக்­கப்­பட்­டது.

செந்­தில் பாலா­ஜியை நீதி மன்றக் காவ­லில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­ட­தால், புழல் சிறைத்­துறை நிர்­வா­கத்­தின்கீழ் செந்­தில் பாலாஜி கொண்­டு­வ­ரப்­பட்­டார். அத­னால் பாது­காப்­புப் பொறுப்பை ஆயு­தப் படை அதி­கா­ரி­க­ளி­டம் அம­லாக்­கத்­து­றை­யி­னர் ஒப்­ப­டைத்­த­னர். இதை­யடுத்து துணை ராணு­வப் படை­யி­னர் நேற்று வெளி­யே­றி­னர்.

அமைச்­சர் செந்­தில்­ பா­லா­ஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்­ப­தால், அவர் வகித்து வந்த மின்­சா­ரம் மற்­றும் மது­வி­லக்கு ஆயத்­தீர்வை துறை­களை மற்ற அமைச்­சர்­க­ளுக்கு கூடு­த­லாக ஒதுக்­கீடு செய்ய தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் முடிவு செய்­துள்­ள­தா­கத் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

அதன்­படி, நிதி அமைச்­ச­ரான தங்­கம் தென்­ன­ர­சுக்கு கூடு­தலாக மின்­சா­ரத் துறை­யை­யும் வீட்டு வச­தித் துறை அமைச்­சர் முத்­து­சா­மிக்கு மது­வி­லக்கு மற்­றும் ஆயத்­தீர்­வைத் துறை­யை­யும் வழங்க ஸ்டா­லின் முடி­வெ­டுத்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இலாகா ஒதுக்­கீடு விவ­ரங்­களை அவர் ஆளு­ந­ருக்­குப் பரிந்­துரைத்துள்­ள­தா­க­வும் அதி­கா­ர­பூர்வ தக­வல் எந்த நேரத்­தி­லும் வெளி­யா­க­லாம் என்றும் தெரி­கிறது.

அதன் பின்­னர் செந்­தில் பாலாஜி இலாகா இல்­லாத அமைச்­ச­ராக இருப்­பார் என ஊட­கச் செய்­தி­கள் கூறு­கின்­றன.

இதற்­கி­டையே, புழல் சிறைத்­துறை நிர்­வா­கத்­தின் கீழ் செந்­தில் பாலாஜி கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­தால், அவரை சந்­திக்க குடும்­பத்­துக்கு மட்­டுமே அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது. மற்­ற­வர்­கள் அவ­ரைச் சந்­திக்க புழல் சிறை நிர்­வா­கத்­தி­டம் அனு­மதி பெற வேண்­டும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.