தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலியல் தொல்லை: முன்னாள் டிஜிபிக்கு 3 ஆண்டுகள் சிறை

1 mins read
5b93e588-8212-4460-b49b-eb1c096ec42e
-

சென்னை: பெண் ஐபி­எஸ் அதி­கா­ரிக்­குப் பாலி­யல் தொல்லை கொடுத்த ராஜேஷ் தாஸ் என்ற முன்­னாள் சிறப்பு டிஜி­பிக்கு மூன்று­ ஆண்­டு­கள் சிறைத்தண்­டனை விதிக்­கப்­பட்டு உள்­ளது. அவர் 10,500 ரூபாய் அப­ரா­த­மும் செலுத்த வேண்­டும்.

ராஜேஷ் தாஸ் உத்­த­ர­வி­ன்படி பெண் ஐபி­எஸ் அதி­கா­ரியை மிரட்டி கார் சாவியைப் பறித்த செங்­கல்­பட்டு மாவட்ட முன்­னாள் எஸ்.பி. கண்­ண­னுக்கு 500 ரூபாய் அப­ரா­தம் விதித்து விழுப்­பு­ரம் தலைமை குற்­ற­வி­யல் நீதி­மன்­றம் நேற்று தீர்ப்பு அளித்­தது.

அதி­முக ஆட்­சி­யில் முதல்­வராக இருந்த எடப்­பாடி பழனி­சாமி, 2021 பிப்­ர­வரி 21ஆம் தேதி திருச்சி, புதுக்­கோட்டை மாவட்­டங்­களில் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்­டி­ருந்­தார்.

அவ­ரது பாது­காப்­புப் பணி­களைக் கண்­கா­ணிக்­கும் பணியில் அப்­போ­தைய சட்­டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஈடு­பட்­டி­ருந்­தார்.

பாது­காப்பு ஆலோ­சனை என்ற பெய­ரில் பெண் ஐபி­எஸ் அதி­காரியைச் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் காரில் அழைத்து சென்­ற­போது பாலி­யல் தொல்லை கொடுத்­துள்­ளார்.

பெண் ஐபி­எஸ் அதி­கா­ரியை மிரட்டி கார் சாவியைப் பறிக்­கும்­படி செங்­கல்­பட்டு மாவட்ட முன்­னாள் எஸ்.பி. கண்­ண­னுக்கு அவர் உத்­த­ர­விட்­டார்.

பெண் ஐபி­எஸ் அதி­காரி தனக்­குப் பாலி­யல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது நட­வ­டிக்கை எடுக்­கக்­கோரி தமிழ்­நாடு அர­சின் உள்­துறை செய­லா­ளரிடம் புகார் செய்­திருந்தார்.