நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரத்தில் நேற்று திடீரென அடித்த சூறைக் காற்றில் 1,000க்கும் மேற்பட்ட நேந்திர வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.
கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் திருவிழாவை முன்னிட்டு கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் நேந்திர வாழையை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
இன்னும் இரண்டு மாதங்களில் அறுவடைக்குத் தயாராகும் நிலையில் இருந்தபோது நேற்று திடீரென்று அரைமணி நேரம் கடும் சூறாவளி வீசியது.
வாழை மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டதால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுவிட்டதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வேளாண் அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி தகுந்த இழப்பீடு வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் உடனடியாக கோரிக்கை விடுத்தனர்.

