செந்தில் பாலாஜியை எட்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

2 mins read

சென்னை: தமக்­குப் பிணை வழங்­கக்­கோரி அமைச்­சர் செந்தில் பாலாஜி தாக்­கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதி­மன்­றம் தள்­ளு­படி செய்­தது. அவரை எட்டு நாள்கள் காவ­லில் வைத்து விசா­ரிக்க அமலாக்­கத்­து­றைக்கு நீதி­மன்­றம் அனு­மதி அளித்­தது.

அண்­மை­யில் செந்­தில் பாலாஜி­யு­டன் தொடர்­பு­டைய நாற்­ப­துக்­கும் மேற்­பட்ட இடங்­களில் அம­லாக்­கத்­துறை அதிரடி சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­டது. அதன் முடி­வில் அவர் கைது செய்­யப்­பட்­டார்.

கடந்த 2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்­சி­யில் போக்­கு­வரத்­துத் துறை அமைச்­ச­ராக இருந்த செந்­தில் பாலாஜி ஓட்டுநர், நடத்துநர் பணி வாங்­கித் தரு­வ­தாக பல­ரி­டம் பணம் வசூ­லித்து மோசடி செய்­த­தா­கப் புகார் எழுந்­தது.

அந்த வழக்கு நிலு­வை­யில் உள்ள நிலை­யில், கடந்த 2021ஆம் ஆண்டு சட்­ட­வி­ரோத பணப் பரி­மாற்ற தடைச் சட்­டத்­தின் கீழ் செந்­தில் பாலாஜி மீது அம­லாக்­கத்­துறை தனி­யாக ஒரு வழக்­கைப் பதிவு செய்­தது. அந்த வழக்­கில்­தான் அவர் இப்­போது கைதாகி உள்­ளார்.

எனி­னும் கைது நட­வ­டிக்­கைக்­குப் பின்­னர் உடல்­நிலை பாதிக்­கப்­பட்­ட­தால் நீதி­மன்ற உத்தர­வின்­படி அவர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார்.

சிகிச்­சை­யில் இருந்­தா­லும் அவர் நீதி­மன்றக் காவ­லில்­தான் உள்­ளார் என்­றும் அவ­ரை 15 நாள்கள் காவ­லில் எடுத்து விசா­ரிக்க வேண்­டி­யுள்­ளது என்­றும் அம­லாக்­கத்­துறை உயர் நீதி­மன்­றத்­தில் மனுத்­தாக்­கல் செய்­தது.

செந்­தில் பாலாஜி விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைக்­க­வில்லை என்று அம­லாக்­கத்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்ட நிலை­யில், அதற்கு அவ­சி­யம் எழ­வில்லை என அவ­ரது தரப்பு வாதிட்­டது.

இரு தரப்பு வாதங்­க­ளை­யும் செவி­ம­டுத்த நீதி­பதி, அமைச்சர் செந்­தில் பாலா­ஜியை எட்டு நாள்கள் காவ­லில் வைத்து விசா­ரிக்க அம­லாக்­கத்­து­றைக்கு அனுமதி வழங்­கி­யது.

இதற்­கி­டையே, வரும் 20ஆம் தேதி நடை­பெ­றும் விசா­ர­ணைக்கு நேரில் முன்­னி­லை­யாக வேண்டும் என செந்­தில் பாலாஜி­யின் சகோ­த­ரர் அசோக்­கு­மா­ருக்கு அம­லாக்­கத்­துறை அழைப்­பாணை அனுப்பி உள்­ளது.