சென்னை: அதிமுக முன்னாள் முதல்வர்களின் படங்களுடன் கூடிய ஆயிரக்கணக்கான கைக்கடிகாரங்கள் (படம்) பயன் படுத்தப்படாததால் வீணாகி உள்ளன.
அதிமுக ஆதரவுடன் இயங்கும் அண்ணா தொழிற்சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அக்கட்சியின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்கள் அச்சிடப்பட்ட கைக்கடிகாரங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் அதிமுக தலைமையைக் கைப்பற்றினார் பழனிசாமி. இதனால் தொழிற்சங்க உறுப்பினர்கள், ஓபிஎஸ் படம் இடம்பெற்றுள்ள கைக்கடிகாரத்தைப் பயன்படுத்த தயங்கினர். ஆயிரக்கணக்கானோர் அக்கடிகாரங்களை ஒதுக்கிவிட்டனர்.
பலர் கடிகாரத்தில் உள்ள படங்களை அகற்றிவிட்டு பயன்படுத்துகின்றனர். இதற்கு 150 ரூபாய் செலவிட வேண்டியுள்ளது என்றும் புலம்புகின்றனர். இதனால் சுமார் 75,000 கைக்கடிகாரங்கள் வீணாகிவிட்டதாகவும் கூறுகின்றனர்.

