மருத்துவப் பரிசோதனை: விசாரணையில் தாமதம்

மருத்துவப் பரிசோதனை: விசாரணையில் தாமதம்

2 mins read
7e7ac5cf-6fdf-484f-8c6d-66fdb1e834a3
-

சென்னை: அம­லாக்­கத்­து­றை­யால் கைது செய்­யப்­பட்­டுள்ள அமைச்சர் செந்­தில் பாலாஜி (படம்) மருத்து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், அவரது நட­வ­டிக்­கை­களை அங்­குள்ள கண்­கா­ணிப்­புக் கரு­வி­கள் மூலம் அம­லாக்­கத்­துறை அதி­காரி­கள் தொடர்ந்து கண்­காணித்து வரு­கின்­ற­னர்.

அமைச்­சர் செந்­தில் பாலாஜியை அம­லாக்­கத்­துறை எட்டு நாள்­கள் காவ­லில் எடுத்து விசா­ரிக்க உயர் நீதி­மன்­றம் அனுமதி வழங்கி உள்­ளது.

இதற்­கான ஆவ­ணத்­தில் அவர் கையெ­ழுத்­திட்­டுள்­ளார். அதை­யும் கண்­கா­ணிப்­புக் கேமரா காட்­சி­க­ளின் வழி அதி­கா­ரி­கள் உறுதி செய்­துள்­ள­னர்.

சட்­ட­வி­ரோத பணப் பரி­மாற்­றத் தடைச் சட்­டத்­தின் கீழ் கைதாகி உள்­ளார் செந்­தில் பாலாஜி. சென்­னை­யில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள அவ­ருக்கு விரை­வில் இரு­தய அறுவை சிகிச்சை நடை­பெற உள்­ளது.

இந்­நி­லை­யில் நீதி­மன்ற உத்­த­ர­வின்­படி எதிர்­வ­ரும் 23ஆம் தேதி மாலை வரை அம­லாக்­கத்­து­றை­யால் அமைச்­சர் செந்தில் பாலாஜியை விசா­ரிக்க இய­லும். அதன் பின்­னர் அவர்மருத்து­வ ­மனை­யில் இருந்­த­ப­டியே காணொளி வசதி மூலம் நீதி­மன்ற விசா­ர­ணைக்கு முன்­னி­லை­யாக வேண்­டும் என்­பது நீதி­மன்ற உத்­த­ர­வா­கும். அவ­ரது பிணை மனு தள்­ளு­படி செய்­யப்­பட்­டுள்­ளது. எட்டு நாள்­கள் காவ­லில் எடுத்து விசா­ரிக்க நீதி­மன்­றம் அனு­மதி அளித்த மறு­நாளே அவ­ரி­டம் அம­லாக்­கத்­துறை விசா­ரணை நடத்­தும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. எனினும் அவ்வாறு நடக்கவில்லை.

அறுவை சிகிச்சை நடை­பெற உள்­ள­தால் அமைச்சா் செந்­தில் பாலா­ஜிக்கு சனிக்­கி­ழ­மை­யன்று மயக்க மருந்­தி­யல் பரி­சோ­தனை நடை­பெற்­றது. இதன் கார­ண­மாகவே அம­லாக்­கத்­துறை அதி­கா­ரி­கள் விசா­ரணை மேற்­கொள்­ள­வில்லை என்­றும் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இந்­நி­லை­யில், செந்­தில் பாலா­ஜி­யின் இளைய சகோ­தரர் அசோக்­கு­மா­ரி­டம் 20ஆம் தேதி விசா­ரணை நடத்த உள்ள அதி­கா­ரி­கள், அவ­ரி­டம் பெறும் தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யில்­தான் அமைச்­ச­ரி­டம் விசா­ர­ணை­யைத் தொடங்­கு­வார்­கள் எனக் கூறப்­படு­கிறது. அம­லாக்­கத்­துறை விசா­ரணை தொடங்­கும் பட்­சத்­தில், தற்­போது செந்­தில் பாலாஜிக்கு மருத்­து­வ­மனை­யில் அளிக்­கப்­பட்டு வரும் தமிழக சிறைத்­துறை பாது­காப்பு விலக்கிக் கொள்­ளப்­படும். அதன் பிறகு மத்­திய காவல் படை­யின் பாது­காப்பு அளிக்­கப்­படும்.

அது­வரை மருத்­து­வ­மனை வளா­கத்­தில் அம­லாக்­கத்­துறை சார்­பில் கண்­கா­ணிப்­புக் கரு­வி­கள் அமைக்­கப்­பட்டு அவற்­றின் மூலம் செந்­தில் பாலா­ஜி­யின் நட­வ­டிக்­கை­களை அம­லாக்­கத்­துறை கண்­கா­ணித்து வரும் என ஊட­கத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.