கோவை: கொரோனா நெருக்கடி காலத்தில் நிறுத்தப்பட்ட கோவை, இலங்கை இடையேயான விமானச் சேவை விரைவில் தொடங்க உள்ளது.
இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கோவை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
"கோவை, இலங்கை இடையே கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமானங்களை இயக்கி வந்தது.
பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த போதிலும், 2020ஆம் ஆண்டு தற்காலிகமாக அந்த விமானச் சேவை நிறுத்தப்பட்டது.
"மிக விரைவில் மீண்டும் இச்சேவையைத் தொடங்குவதற்கு ஏதுவாக 'ஸ்லாட்' என்று குறிப்பிடப்படும் விமானம் வந்து செல்லும் நேரம், ஓடுபாதை, விமான நிறுத்துமிடம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் நடவடிக்கைகள் தொடங்கும். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகும்," என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.