பாலிவுட்டில் பாரபட்சம்: புதிதல்ல என்கிறார் டாப்சி

பாலிவுட்டில் பாரபட்சம்: புதிதல்ல என்கிறார் டாப்சி

1 mins read
f4be70e9-5038-4116-9409-6a7c92cf8bc3
டாப்சி - படம்: ஊடகம்

இந்தித் திரையுலகில் நடிகர், நடிகைகள் பாரபட்சமாக நடத்தப்படுவது என்பது புதிய விஷயம் அல்ல என்கிறார் நடிகை டாப்சி.

வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற அடிப்படையில்தான் அங்கு அனைத்தும் நடப்பதாக அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“நான் நடிக்க வருவதற்கு முன்பே இதுகுறித்து தெரியும். நமக்கு ஏற்ற சூழ்நிலைகள் இல்லை என்றாலும் தொடர்ந்து திரையுலகில் நீடித்து, நடிக்க வேண்டும் என்று நினைத்தால் அது அவரவர் விருப்பம்.

“பின்னர் யாரும் அதைப் பற்றி குறைகூற முடியாது. அதேபோல் அந்தத் துறையில் நாம் வளர்ந்துவிட்டால் யாரும் நம்மை வெளியேற்றவும் முடியாது” என்கிறார் டாப்சி.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்