பேனா நினைவுச் சின்னம்: விரைவில் பணிகள் தொடங்கும்

பேனா நினைவுச் சின்னம்: விரைவில் பணிகள் தொடங்கும்

1 mins read
cc5962ba-eb0b-4157-a4be-0fb9c457be39
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா சின்னம். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடற்கரையில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டு. இதற்காக மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டது.

அதற்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது.

சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு விதித்த அதே 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது.

தேவையான அனைத்து அனுமதியும் கிடைத்திருப்பதால் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கான பணிகளை விரைவில் தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்