தமிழ்த் திரையுலகில் ஏற்கெனவே வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்களை மறுவெளியீடு செய்வது அதிகரித்து வருகிறது.
அண்மையில் கமல் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தை மறுவெளியீடு செய்தனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பும் வசூலும் கிடைத்துள்ளது.
இதையடுத்து சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படத்தையும் மறு வெளியீடு செய்ய உள்ளனர்.
முன்னதாக ரஜினி நடித்த ‘தனிக்காட்டு ராஜா’, ‘பாபா’ ஆகிய இருபடங்களும் இதே முறையில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றன.
ஏற்கெனவே வெளியாகி தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய சில படங்கள் மறு வெளியீட்டின்போது லாபம் பார்த்து வருகின்றன.
இதனால் தயாரிப்பாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.