தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தண்டவாளத்தில் பெரிய கற்கள்: ரயிலைக் கவிழ்க்க சதி

1 mins read
947c3af5-0ade-4a65-beeb-a15dda2564c9
அருகிலுள்ள கிராம மக்களிடம் விசாரணை நடைபெறுகிறது. - படம்: இணையம் 

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான கற்களை வைத்தவர்களுக்கு காவல்துறை வலைவீசி உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு காவேரி விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது.

அப்போது ஆம்பூர் அருகில் உள்ள பச்சை குப்பம் பகுதியில் ரயில் தண்டவளாத்தில் கான்கீரிட் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அதைக் கண்டு ரயில் ஓட்டுநர் வண்டியை நிறுத்த முயற்சி செய்தார். எனினும் கற்கள் மீது ரயில் மோதியதில் அவை தூள் தூளாகச் சிதறின.

இதுகுறித்து அருகிலுள்ள கிராம மக்களிடம் விசாரணை நடைபெறுகிறது.

அண்மையில், திருச்சி பகுதியில் ரயில் தண்டவளாத்தில் லாரி டயர் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் ரயிலை கவிழ்க்க நடைபெற்ற சதி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் காவல்துறை கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்